என் மலர்

  செய்திகள்

  தீபாவளி விற்பனைக்கு தயாராகிறது: தீவுத்திடலில் ரூ.20 கோடி பட்டாசு விற்க முடிவு
  X

  தீபாவளி விற்பனைக்கு தயாராகிறது: தீவுத்திடலில் ரூ.20 கோடி பட்டாசு விற்க முடிவு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தீபாவளி பண்டிகையொட்டி தீவுத்திடலில் ரூ.20 கோடி மதிப்புள்ள பட்டாசுகள் விற்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
  சென்னை:

  தீபாவளி பண்டிகை வருகிற 29-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது. தீபாவளிக்கு இன்னும் 28 நாட்களே உள்ள நிலையில் பட்டாசு கடைகள் இப்போதே முளைக்க தொடங்கிவிட்டன.

  2011-ம் ஆண்டு முதல் சென்னை தீவுத்திடலில் பட்டாசு விற்பனை நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு கனமழை காரணமாக பட்டாசு விற்பனை மந்தமாக இருந்தது. கடந்த ஆண்டைபோல இந்த வருடமும் புதிய ரக பட்டாசுகள் விற்பனைக்கு வந்துள்ளது.

  தமிழ்நாடு முழுவதும் ரூ.50 கோடி மதிப்புள்ள பட்டாசுகள் விற்பனைக்கு தயாராக உள்ளன. சென்னை மற்றும் புறநகர் பகுதி மக்களுக்காக ரூ.20 கோடி மதிப்புள்ள பட்டாசுகள் சிவகாசியில் இருந்து சென்னை வர இருக்கிறது.

  14-ந்தேதிக்குள் புதிய ரக பேன்சி வகையான பட்டாசுகள் வருகின்றன. தீவுத்திடலில் பட்டாசு கடைகள் வைப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. 58 பட்டாசு கடைகள் இடம் பெற உள்ளன.

  இதுகுறித்து சென்னை பெருநகர பட்டாசு விற்பனையாளர்கள் சங்க செயல் தலைவர் எம்.ஷேக் அப்துல்லா கூறியதாவது:-

  தீவுத்திடலில் பட்டாசு கடைகள் அமைக்கப்பட்டதும் 8 மணி நேரத்தில் சிவகாசியில் இருந்து பட்டாசுகள் சென்னை கொண்டு வரப்படும். 15-ந்தேதியில் இருந்து பட்டாசு விற்பனை தொடங்க திட்டமிட்டுள்ளோம். கடந்த ஆண்டைவிட இந்தாண்டு பட்டாசுகளின் விலை 10 சதவீதம் உயர்ந்துள்ளது. பட்டாசு கிப்ட் பாக்கெட்டின் விலை ரூ.250 முதல் ரூ.3 ஆயிரம் வரை உள்ளது.

  ஆர்டர் கொடுத்த அனைத்து பட்டாசுகளும் தயாரிக்கப்பட்டு சிவகாசி பட்டாசு உற்பத்தி கிடங்கில் தயாராக உள்ளன.

  இவ்வாறு அவர் கூறினார்.
  Next Story
  ×