என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
உள்ளாட்சி தேர்தல் மனுதாக்கல் இன்று நிறைவு
Byமாலை மலர்3 Oct 2016 9:18 AM GMT (Updated: 3 Oct 2016 9:18 AM GMT)
உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்றுடன் முடிவடைகிறது.
சென்னை:
தமிழகத்தில் 12 மாநகராட்சிகள், 124 நகராட்சிகள், 528 பேரூராட்சிகள், 388 ஊராட்சி ஒன்றியங்கள், 31 மாவட்ட பஞ்சாயத்துகள், 12 ஆயிரத்து 524 கிராம பஞ்சாயத்துகள் உள்ளன. இந்த அமைப்புகளில் 1 லட்சத்து 25 ஆயிரம் பதவிகளுக்கு தேர்தல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
கிராம பஞ்சாயத்து தலைவர் மற்றும் உறுப்பினர்களை தவிர மற்ற அனைத்து பதவிகளுக்கும் அரசியல் கட்சிகளின் சின்னத்தில் போட்டியிடுவார்கள்.
உள்ளாட்சி தேர்தல் வருகிற 17 மற்றும் 19-ந்தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. வேட்பு மனுதாக்கல் கடந்த மாதம் 26-ந்தேதி தொடங்கியது. நேற்று முன்தினம் வரை 2 லட்சத்து 52 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட மறுநாளே அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. மறுநாளே மாநகராட்சி கவுன்சிலர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டவர்கள் மனுதாக்கல் செய்தனர்.
தி.மு.க., காங்கிரஸ், த.மா.கா., பா.ஜனதா, பா.ம.க., ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் படிப்படியாக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டன.
மனுதாக்கல் செய்ய கடைசி நாளான இன்று கூட்டம் அலைமோதியது. ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் குவிந்ததால் வேட்பு மனுக்களை பெறுவதற்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.
கிராம பஞ்சாயத்து தலைவர் மற்றும் உறுப்பினர் பதவிகளுக்கு ஆர்வத்துடன் பலர் வேட்பு மனுதாக்கல் செய்தார்கள். இன்றுடன் வேட்பு மனுதாக்கல் முடிவடைகிறது. நாளை மனுக்கள் மீதான பரிசீலனை நடக்கிறது.
வருகிற 6-ந்தேதி மனுக்கள் வாபஸ் பெற கடைசி நாள் ஆகும். அன்று மாலையில் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.

Next Story
×