search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெரம்பலூர் அருகே கார் மோதிய விபத்தில் பெண் பலி
    X

    பெரம்பலூர் அருகே கார் மோதிய விபத்தில் பெண் பலி

    பெரம்பலூர் அருகே சாலையை கடக்க முயன்ற பெண் மீது கார் மோதியதில் பெண் பலியானார்
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் அருகே உள்ள காடூர் கிராமத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவரது மனைவி நல்லம்மாள்(வயது 57). பாலகிருஷ்ணன் உடல் நலக்குறைவால் பெரம்பலூர் அருகே சிறுவாச்சூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இவரை பார்ப்பதற்காக அவரது மனைவி நல்லம்மாள் நேற்று மதியம் 2 மணியளவில் பெரம்பலூரிலிருந்து ஆட்டோவில் சென்று மருத்துவமனை முன்பு இறங்கி சாலையை கடக்க முயன்றுள்ளார்.

    அப்போது எதிர்பாராத விதமாக சென்னையிலிருந்து திருச்சி நோக்கி அதிவேகமாக வந்த கார் மோதியதில் நல்லம்மாள் படுகாயமடைந்தார். உடனே அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட நல்லம்மாள் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

    இது குறித்த தகவலறிந்த பெரம்பலூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் பெரியசாமி சம்பவ இடத்தை பார்வையிட்டு பின்னர் இறந்து போன நல்லம்மாள் உடலை பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

    இறந்த நல்லம்மாள் மகன் இளையராஜா கொடுத்த புகாரின் பேரில் பெரம்பலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய கார் டிரைவர் திருநெல்வேலியை சேர்ந்த தனராஜ் மகன் ரஞ்சித்பால் (38) என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    Next Story
    ×