search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேனி அருகே பஞ்சாயத்து தலைவர் பதவி ரூ.5 லட்சத்துக்கு ஏலம்
    X

    தேனி அருகே பஞ்சாயத்து தலைவர் பதவி ரூ.5 லட்சத்துக்கு ஏலம்

    தேனி அருகே பஞ்சாயத்து தலைவர் பதவி ரூ.5 லட்சத்துக்கு ஏலம் போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
    தேனி:

    சின்னமனூர் நகராட்சிக்குட்பட்ட அய்யம்பட்டி ஊராட்சியில் கிராமக் கூட்டம் நடத்தப்பட்டது. கூட்டத்தில் தலைவர், உறுப்பினர்களை ஏல முறையில் தேர்ந்தெடுப்பது என முடிவு செய்யப்பட்டது. தலைவருக்கு ரூ.10 லட்சம், உதவித் தலைவருக்கு ரூ.5 லட்சம், ஊராட்சி உறுப்பினர்களுக்கு ரூ.1 லட்சம் என தொகை நிர்ணயம் செய்யப்பட்டது.

    ஆனால் ஏலத்தொகை அதிகமாக இருப்பதாக பல்வேறு தரப்பினரும் எதிர்ப்புத் தெரிவித்தனர். பின்னர் தொகை பாதியாக குறைக்கப்பட்டது. அதனடிப்படையில் பெயர்கள் எழுதிப்போட்டு குலுக்கல் முறையில் நேற்று தேர்வு செய்யப்பட்டனர்.

    தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட அண்ணாத்துரை ரூ.5 லட்சமும், உதவித் தலைவராக தேர்தெடுக்கப்பட்ட ரவி ரூ. 2½ லட்சமும் செலுத்தினர்.

    ஊராட்சி உறுப்பினர்களாக குலுக்கல் முறையில் தேர்வான 6 பேர் தலா ரூ.50 ஆயிரம் பணம் செலுத்தியுள்ளனர். ஒரு ஊராட்சி உறுப்பினரை மட்டும் தேர்வு செய்ய எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து குலுக்கல் ஒத்தி வைக்கப்பட்டது.

    ஜனநாயக முறைப்படி தேர்தல் நடத்தாமலேயே அய்யம்பட்டி கிராம ஊராட்சி நிர்வாகிகள் ஏல முறையில் தேர்வு செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 2006ம் ஆண்டும் அய்யம்பட்டியில் ஊராட்சித் தலைவர் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு பின்னர் நிர்ணயிக்கப்பட்ட தொகையை செலுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×