என் மலர்

  செய்திகள்

  விருதுநகர் அருகே தீப்பெட்டி தொழிற்சாலையில் தீ விபத்து
  X

  விருதுநகர் அருகே தீப்பெட்டி தொழிற்சாலையில் தீ விபத்து

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  விருதுநகர் அருகே உள்ள தீப்பெட்டி தொழிற் சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

  விருதுநகர்:

  விருதுநகர் அருகே உள்ள ஆவுடையாபுரத்தைச் சேர்ந்தவர் காளிராஜ் (வயது 50). இவர் அதே பகுதியில் தீப்பெட்டி தொழிற்சாலை நடத்தி வருகிறார்.

  இங்கு சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த 10-க்கும் மேற்பட்டவர்கள் வேலை பார்த்து வருகின்றனர். சம்பவத்தன்று ஆலையில் பணி நடந்தபோது மூலபொருட்கள் உரசி தீ பற்றியது. சிறிது நேரத்தில் தீ மளமளவென பரவியது. இதில் அந்த அறை முழுவதும் எரிந்து நாசமாயின. அதிர்ஷ்டவசமாக உயிர் பலி ஏற்படவில்லை.

  இந்த தீ விபத்தில் ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் சாம்பலானது.

  இதுகுறித்து துலுக்கப்பட்டி கிராம நிர்வாக அதிகாரி மணிபாண்டி கொடுத்த புகாரின்பேரில் வச்சக்காரப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீப் பெட்டி தொழிற்சாலை உரிமையாளர் காளிராஜ், மேலாளர் சின்னமாரியப்பன் ஆகியோரை கைது செய்தனர்.

  Next Story
  ×