என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மத்திய மந்திரி சபையில் இருந்து சதானந்தா கவுடாவை நீக்க வேண்டும்: பி.ஆர். பாண்டியன் வலியுறுத்தல்
Byமாலை மலர்3 Oct 2016 5:04 AM GMT (Updated: 3 Oct 2016 5:04 AM GMT)
மத்திய மந்திரி பதவியில் இருந்து சதானந்தா கவுடாவை நீக்க வேண்டும் என பி.ஆர். பாண்டியன் கூறி உள்ளார்.
மன்னார்குடி:
தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர். பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை அவமதிக்கும் நோக்கோடு கர்நாடக அரசு செயல்படுவது கண்டிக்கத்தக்கது. இந்த பிரச்சனையில் முன்னாள் பிரதமர் தேவேகவுடா உள்ளிட்ட கர்நாடக அனைத்து கட்சி தலைவர்களும் கன்னட வெறியர்களாக மாறி செயல்படுவதையும், அரசியல் அமைப்பு சட்டத்தை குழி தோண்டி புதைப்பதையும் மத்திய அரசு வேடிக்கை பார்க்கிறது.
மத்திய மந்திரி சதானந்தா கவுடா மத்திய மந்திரி சபை முடிவுக்கு எதிராக செயல்படுவதை பிரதமர் நரேந்திர மோடி கண்டிக்காதது ஏன்? இதே நிலை தொடருமானால் இந்தியாவின் ஒற்றுமைக்கு பேராபத்து ஏற்படும்.
சதானந்தா கவுடாவை மத்திய மந்திரி சபையிலிருந்து நீக்குவதன் மூலம் மந்திரி சபைக்கு ஏற்பட்டுள்ள களங்கத்தை பிரதமர் போக்க வேண்டும். சோனியா காந்தியுடன் பேசி சுமூக தீர்வு கண்டு அரசியல் அமைப்பு சட்டத்துக்கு ஏற்பட்டுள்ள பேராபத்தை தடுத்து நிறுத்தி தமிழக விவசாயிகளை பாதுகாக்க வேண்டும்.
காவிரி மேலாண்மை வாரியம், பங்கீட்டு குழு அமைக்க மத்திய மந்திரி சபை கூட்டத்தை கூட்டி அவசர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
கர்நாடக கலவரத்தில் பாதிக்கப்பட்ட லாரி, பஸ் உரிமையாளர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.
இந்த கோரிக்கையை வலியுறுத்தி வருகிற 5-ந்தேதி சென்னையில் கவர்னர் மாளிகை முன் காலை முதல் மாலை வரை தொடர் உண்ணாவிரத போராட்டம் நடக்கிறது.
இதில் விவசாயிகள் பெருமளவில் பங்கேற்க வேண்டும்.
இவ்வாறு பி.ஆர்.பாண்டியன் கூறினார்.

Next Story
×