என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கள்ளக்குறிச்சி அருகே ஒரே குடும்பத்தில் ரத்தவாந்தி எடுத்து 2 குழந்தைகள் மர்ம மரணம்: தந்தையிடம் போலீசார் விசாரணை
Byமாலை மலர்3 Oct 2016 5:00 AM GMT (Updated: 3 Oct 2016 5:00 AM GMT)
கள்ளக்குறிச்சி அருகே ஒரே குடும்பத்தில் 2 குழந்தைகள் தொடர்ந்து ரத்தம் கக்கி இறந்ததால் கிராம மக்கள் மத்தியில் பேய் பீதி ஏற்பட்டுள்ளது. பேய் தாக்கியதால் குழந்தைகள் இறந்திருக்கலாம் என மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி:
விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே உள்ள அகரகோட்டாலம் கிராமத்தை சேர்ந்தவர் குமார்(வயது 30). கூலித் தொழிலாளி. இவரது மனைவி அலமேலு இவர்களுக்கு இளவரசன்(4), நிஷா(1) என 2 குழந்தைகள் இருந்தன.
கடந்த 10 நாட்களுக்கு முன்பு சிறுவன் இளவரசன் திடீரென ரத்த வாந்தி எடுத்து மயங்கி விழுந்தான். உடனடியாக அவனை கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் இளவரசன் பரிதாபமாக இறந்தான்.
உடனே போலீசுக்கு தெரிவிக்காமல் ஆஸ்பத்திரியில் இருந்து இளவரசன் பிணத்தை குமார் வீட்டுக்கு எடுத்து வந்து காட்டுப் பகுதியில் புதைத்து விட்டார்.
சிறுவன் இளவரசன் இறந்ததால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த பரபரப்பு அடங்குவதற்குள் குழந்தை நிஷா நேற்று காலை 11 மணியளவில் வாயில் நுரைகக்கி ரத்த வாந்தி எடுத்து சுருண்டு விழுந்தது.
இதைபார்த்த அலமேலு அதிர்ச்சி அடைந்தார். அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு குழந்தை நிஷாவை கொண்டு சென்றார். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.பின்னர் முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். டாக்டர்கள் பரிசோதித்து விட்டு குழந்தை நிஷா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதைஅறிந்த குழந்தையின் தாய் அலமேலு கதறி துடித்தார். பின்னர் அவர் கூறும்போது, என் குழந்தைகள் எப்படி இறந்தது என்று எனக்கு தெரியவில்லை. பேய் தாக்கியதோ அல்லது சாமி குத்தமோ? என் 2 குழந்தைகள் பலியாகி விட்டன என்றார்.
தந்தை குமார் கூறும்போது, குழந்தைகள் இளவரசன், நிஷா ஆகியோருக்கு வலிப்பு வந்தது. அதனால் வாயில் நுரை தள்ளியது. கை, கால்கள் இழுத்துக்கொண்டன. வலிப்பு நோயினால்தான் குழந்தைகள் இறந்தன என்று கூறினார்.
கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் கூறுகையில் வலிப்பு நோயினால் குழந்தை இறக்க வாய்ப்பு இல்லை. சாவில் மர்மம் உள்ளது.
முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை நடக்கிறது. அதில் தான் குழந்தை எப்படி இறந்தது என்று தெரியவரும் என்று கூறினார்கள்.
குழந்தை சாவில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதால் கள்ளக்குறிச்சி போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். குழந்தையின் தந்தை குமாரை சப்-இன்ஸ்பெக்டர் சிவசந்திரன் பிடித்து சென்று விசாரணை நடத்தி வருகின்றார்.
சிறுவன் இளவரசன் இறந்ததை பிரேத பரிசோதனை செய்யாமல் காட்டில் புதைத்தது ஏன்? குழந்தைகள் எதனால் தொடர்ந்து இறந்தன? என்று அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்.
ஒரே குடும்பத்தில் 2 குழந்தைகள் தொடர்ந்து ரத்தம் கக்கி இறந்ததால் கிராம மக்கள் மத்தியில் பேய் பீதி ஏற்பட்டுள்ளது. பேய் தாக்கியதால்தான் குழந்தைகள் இறந்திருக்கலாம் என்று அச்சம் அடைந்துள்ளனர்.
முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் இருந்து பிரேத பரிசோதனை அறிக்கை வந்தால்தான் குழந்தைகள் எப்படி இறந்தன? என்பதற்கான மர்ம முடிச்சு அவிழும். மக்களிடமும் பீதி நீங்கும்.

Next Story
×