search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குடியாத்தத்தில் துணிக்கடையில் திருடிய 4 பெண்கள் கைது
    X

    குடியாத்தத்தில் துணிக்கடையில் திருடிய 4 பெண்கள் கைது

    குடியாத்தத்தில் துணிக்கடையில் திருடிய கிருஷ்ணகிரியை சேர்ந்த 4 பெண்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    குடியாத்தம்:

    குடியாத்தம் பிச்சனூர் கங்காதரசுவாமி மடாலயம் தெருவை சேர்ந்தவர் மகேஷ் (வயது33). அதே பகுதியில் ரெடிமேட் துணிக்கடை வைத்துள்ளார்.

    நேற்று மாலையில் அந்த துணிக்கடைக்கு 4 பெண்கள் வந்தனர். அவர்கள், துணிகளை பார்த்துவிட்டு, எதுவும் எங்களுக்கு பிடிக்கவில்லை என்று கூறிவிட்டு சென்றுவிட்டனர். அவர்கள் சென்றதும், பார்வைக்காக எடுத்துபோட்ட துணிகளின் அளவு குறைந்து இருப்பது தெரியவந்தது. இதையடுத்து மகேஷ், அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அந்த 4 பெண்களையும் மடக்கி பிடித்தார். அவர்கள் ரூ.6 ஆயிரம் மதிப்புள்ள 10 பேண்டை திருடி மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.

    இதுகுறித்து குடியாத்தம் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸ் இன்ஸ்பெக்டர் மதியரசன், சப்- இன்ஸ்பெக்டர் காந்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவர்கள் 4 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில், கிருஷ்ணகிரி மாவட்டம் பால்நாயக்கன்பள்ளியை அடுத்த அழகிபுதூர் பகுதியை சேர்ந்த நரசம்மாள் (70), தேவம்மாள் (55), கிருஷ்ணவேணி (50), கல்யாணி (32) என்பது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து போலீசார் 4 பேரையும் கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×