என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய 18 லட்சம் பேர் விண்ணப்பம்: தேர்தல் அதிகாரி தகவல்
Byமாலை மலர்3 Oct 2016 1:30 AM GMT (Updated: 3 Oct 2016 1:30 AM GMT)
2 சிறப்பு முகாம்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கம், திருத்தம் ஆகியவற்றுக்காக 18 லட்சம் பேர் விண்ணப்பம் கொடுத்துள்ளதாக தேர்தல் அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார்
சென்னை:
2 சிறப்பு முகாம்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கம், திருத்தம் ஆகியவற்றுக்காக 18 லட்சம் பேர் விண்ணப்பம் கொடுத்துள்ளனர்.
வாக்காளர் பட்டியலில் சிறப்பு சுருக்கமுறைத் திருத்தம் செய்யப்படுவதற்காக வரைவு வாக்காளர் பட்டியல் செப்டம்பர் 1-ந் தேதி வெளியிடப்பட்டு, 30-ந் தேதி வரை திருத்த விண்ணப்பங்கள் பெறப்பட்டது. 11 மற்றும் 25-ந் தேதிகளில் சிறப்பு முகாமை இந்திய தேர்தல் கமிஷன் ஏற்பாடு செய்திருந்தது.
11-ந் தேதி 65 ஆயிரத்து 961 வாக்குச்சாவடி மையங்களில் நடந்த முகாமில், பெயர் சேர்க்க 5 லட்சத்து 77 ஆயிரத்து 675 பேரும் மற்ற திருத்தங்கள் உள்பட மொத்தம் 7 லட்சத்து 30 ஆயிரத்து 91 பேர் விண்ணப்பித்தனர். வேலை நாட்களில் 21,920 பேரும், இணையதளம் மூலம் 50 ஆயிரம் பேரும் விண்ணப்பித்தனர். கடந்த 2 முகாம்களில் மட்டும் தமிழகம் முழுவதும் 18 லட்சத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் கொடுக்கப்பட்டன.
இந்த விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு எடுக்கப்பட்டு தகுதியுள்ளவை ஏற்கப்படும். அதன்படி, பாதிக்கும் மேற்பட்ட விண்ணப்பங்களில் முடிவு எடுக்கப்பட்டு, தகுதியுள்ள பெயர்கள், உள்ளாட்சித் தேர்தல்களில் பயன்படுத்தப்படும் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படும் என்று தேர்தல் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மீதமுள்ள விண்ணப்பங்களையும் பரிசீலித்து, வரும் ஜனவரியில் வெளியிடப்படும் புதிய வாக்காளர் பட்டியலில் தகுதியின் அடிப்படையில் சேர்க்கப்படும். முதன் முதலாக வாக்காளராக தகுதி பெறுவோருக்கு வண்ண வாக்காளர் அடையாள அட்டை இலவசமாக தரப்படும் என்றும் அவர் கூறினார்.

Next Story
×