என் மலர்
செய்திகள்

கொடுமுடி அருகே கார் மோதி சைக்கிளில் சென்ற சிறுவன் பலி
கொடுமுடி அருகே கார் மோதி சைக்கிளில் சென்ற சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார். இன்னொரு சிறுவன் காயத்துடன் தப்பினான்.
ஈரோடு:
கொடுமுடி அருகே உள்ள ஈச்சம்பள்ளி அகதிகள் முகாமை சேர்ந்த ஜோசப் என்பவரின் மகன் மோகன்ராஜ் (வயது 14) மற்றும் சிவக்குமார் என்பவரது மகன் சிம்சன் (12).
சிறுவர்கள் மோகன்ராஜ் மற்றும் சிம்சன் இருவரும் எழுமாத்தூர்-பாசூர் ரோட்டில் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். சைக்கிளை மோகன்ராஜ் ஓட்டி சென்றான். சிறுவன் சிம்சன் பின்னால் உட்கார்ந்திருந்தான்.
இவர்கள் இடது புறமாக சென்ற போது பின்னால் வந்த ஒரு கார் சைக்கிள் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் சைக்கிளில் இருந்து இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர்.
மோகன்ராஜை ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். மற்றொரு சிறுவனான சிம்சனை ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்த போது சிம்சன் இறந்து விட்டதாக கூறினர்.
இந்த விபத்து குறித்து மலையம்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story