என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெருந்துறை அருகே வீட்டில் இருந்த சிலிண்டர் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு
    X

    பெருந்துறை அருகே வீட்டில் இருந்த சிலிண்டர் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு

    பெருந்துறை அருகே வீட்டில் இருந்த கியாஸ் சிலிண்டர் திடீரென தீ பிடித்து எரிந்தது. உடனே தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தடுத்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
    ஈரோடு:

    பெருந்துறை அருகே உள்ள சானிட்டோரியம் அய்யப்பன் நகரை சேர்ந்தவர் நடராஜன் இவரது மனைவி பார்வதி. நேற்று மாலை பார்வதி வீட்டில் ஸ்டவ் அடுப்பில் சமையல் செய்து கொண்டிருந்தார்.

    அப்போது கியாஸ் சிலிண்டர் ரெகுலேட்டரில் திடீர் கசிவு ஏற்பட்டு தீ பிடித்து புகை வந்தது. உடனே வீட்டில் இருந்தவர்கள் வெளியே ஓடி வந்தனர்.

    இது குறித்து பெருந்துறை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. நிலைய அலுவலர் பாஸ்கரன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர். அவர்கள் சிலிண்டர் மீது ஈர சாக்கை போட்டனர். பிறகு சிலிண்டர் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்து சிலிண்டரை குளிர்ச்சி படுத்தினர். இதையொட்டி தீ முற்றிலும் தடுக்கப்பட்டு அணைக்கப்பட்டது.

    சிலிண்டர் வெடித்திருந்தால் பெரும் விபத்து ஏற்பட்டு இருக்கும். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தடுத்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
    Next Story
    ×