என் மலர்

  செய்திகள்

  லாலாப்பேட்டை அருகே அனுமதியின்றி மது விற்ற வாலிபர் கைது
  X

  லாலாப்பேட்டை அருகே அனுமதியின்றி மது விற்ற வாலிபர் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  லாலாப்பேட்டை அருகே அனுமதியின்றி மது விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.


  லாலாப்பேட்டை அடுத்த கருப்பத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட வேங்காம் பட்டியைச் சேர்ந்த தங்கராசு மகன் செல்வராஜ் ( வயது 35). இவர் தன்னுடைய வேங்காம் பட்டியில் உள்ள வீட்டின் பின்புறம் மது பாட்டில்களை வைத்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

  இதையடுத்து லாலாப்பேட்டை போலீசார் விரைந்து சென்று செல்வராஜை பிடித்து அவரிடம் இருந்த 3 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

  இது குறித்து லாலாப்பேட்டை சிறப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் பரமேஷ்வரன் வழக்கு பதிவு செய்து செல்வராஜை கைது செய்தார்.

  Next Story
  ×