என் மலர்
செய்திகள்

அவதூறு வழக்கை ரத்து செய்யக்கோரி மதுரை ஐகோர்ட்டில் விஜயதாரணி மனு
அவதூறு வழக்கை ரத்து செய்யக்கோரி விஜயதாரணி எம்.எல்.ஏ. மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.
மதுரை:

காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதாரணி, மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருப்பதாவது:-
குமரி மாவட்டம் கருங்கல் சந்தை திடலில் 27.9.15-ல் நடந்த காங்கிரஸ் கூட்டத்தில் அரசையும், முதல்வர் ஜெயலலிதாவையும் அவதூறாக பேசியதாக என் மீது நாகர்கோவில் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கருங்கல் கூட்டத்தில் நான் பேசிய பேச்சு தவறுதலாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. தமிழக அரசின் செயல்பாடுகளையும், டாஸ்மாக் மதுபானத்தால் ஏற்படும் தீமைகள் குறித்தும், விவசாயிகளின் கஷ்டங்கள் குறித்தும் பேசினேன்.
இந்த கூட்டத்தில் முதல் வரை தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்யவில்லை. அரசின் செயல்பாடுகளையும், தவறுகளையும் சுட்டிக் காட்டுவதற்கு உரிமை உண்டு. இதனால் அவதூறு வழக்கை ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.
இந்த மனு விரைவில் விசாரணைக்கு வருகிறது.

Next Story