என் மலர்

  செய்திகள்

  பாப்பிரெட்டிப்பட்டியில் வாக்குச்சாவடி வரைவு பட்டியல் வெளியீடு
  X

  பாப்பிரெட்டிப்பட்டியில் வாக்குச்சாவடி வரைவு பட்டியல் வெளியீடு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. சேலம் மாவட்டத்தில் தேர்தலை முன்னிட்டு வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

  பொம்மிடி:

  தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. சேலம் மாவட்டத்தில் தேர்தலை முன்னிட்டு வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் பெயர் சேர்த்தல், நீக்கம் உள்ளிட்டவை இருப்பின் சரிசெய்ய சிறப்பு முகாமுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. இந்தநிலையில் பாப்பிரெட்டிப்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான வரைவு வாக்குச்சாவடி பட்டியல் வெளியிடப்பட்டது. வட்டார வளர்ச்சி அலுவலர் ஆனந்தன் இதனை வெளியிட்டார். இதில் வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) தனபால் மற்றும் அலுவலக பணியாளர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த பட்டியலில் ஒரு வார்டில் உள்ளவர்கள் எங்கே சென்று வாக்களிக்க வேண்டும். வாக்குச்சாவடி தொலைவாகவும், வசதி குறைவாகவும் இருந்தால், அதுகுறித்து தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் தெரிவிக்கலாம் என்று வட்டார வளர்ச்சி அலுவலர் ஆனந்தன் தெரிவித்தார்.

  Next Story
  ×