என் மலர்

  செய்திகள்

  குண்டர் சட்டத்தில் 59 பேர் கைது: குமரி மாவட்டத்தில் ரவுடிகள் கலக்கம்
  X

  குண்டர் சட்டத்தில் 59 பேர் கைது: குமரி மாவட்டத்தில் ரவுடிகள் கலக்கம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தர்மராஜன் ரவுடிகளை கட்டுப்படுத்த அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.
  நாகர்கோவில்:

  குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தர்மராஜன் ரவுடிகளை கட்டுப்படுத்த அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.

  போலீஸ் நிலையங்கள் வாரியாக ரவுடிகள் பட்டியல் தயாரிக்கப்பட்டு அவர்கள் கைது செய்யப்பட்டு வருகிறார்கள். கடந்த 9 மாதத்தில் 58 ரவுடிகள் குணடர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.  மேலும் பல ரவுடிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் ரவுடிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.

  நாகர்கோவில் கோட்டார் பகுதியைச் சேர்ந்தவர் சந்தைராஜன் (வயது 33). இவர் மீது தேரூர் இரட்டைக் கொலை வழக்கு மற்றும் கோட்டார், ஈத்தாமொழி போலீஸ் நிலையத்தில் கொலை வழக்குகள் உள்ளது. கோட்டார் போலீசார் கடந்த  சில மாதங்களுக்கு முன்பு கஞ்சா வழக்கு ஒன்றில் சந்தைராஜனை கைது செய்து ஜெயிலில் அடைத்திருந்தனர்.

  தொடர்ந்து அவர் குற்றச்செயலில் ஈடுபட்டு வந்ததால் அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தர்மராஜன், கலெக்டர் சஜ்ஜன்சிங் சவானுக்கு பரிந்துரை செய்தார்.

  இதை தொடர்ந்து சந்தைராஜனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் உத்தர விட்டார். இதையடுத்து சந்தைராஜன் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
  Next Story
  ×