என் மலர்

  செய்திகள்

  கண்ணமங்கலம் அருகே கார் மோதி மாணவன் காயம்
  X

  கண்ணமங்கலம் அருகே கார் மோதி மாணவன் காயம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கண்ணமங்கலம் அருகே கார் மோதி 1-ம் வகுப்பு மாணவன் காயம் அடைந்தார்.
  கண்ணமங்கலம்:

  கண்ணமங்கலம் அருகே புதுப்பாளையம் மணிக்காரன் கொட்டாவை சேர்ந்தவர் வேல்முருகன். இவரது மகன் மைசீகன் (வயது 6). தாமரைப்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வருகிறார்.

  பள்ளிக்கு செல்வதற்காக தனது தாய் ஆர்த்தியுடன் ஆரணி ரோட்டில் நின்று கொண்டிருந்தார். திடீரென மைசீகன் ரோட்டை கடக்க முயன்றார். அப்போது ஒண்ணுபுரத்தில் இருந்து ஆரணி நோக்கி வந்த கார் மைசீகன் மீது மோதியது.

  இதில் காயம் அடைந்த மைசீகன் வேலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இது குறித்து கண்ணமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
  Next Story
  ×