என் மலர்

  செய்திகள்

  செங்கோட்டை அருகே கயிறு தொழிற்சாலையில் தீ விபத்து
  X

  செங்கோட்டை அருகே கயிறு தொழிற்சாலையில் தீ விபத்து

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  செங்கோட்டை அருகே கயிறு தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தினால் அங்கு பரபரப்பு நிலவியது.
  செங்கோட்டை:

  செங்கோட்டை அருகே உள்ள கணக்கப்பிள்ளை வலசையிலிருந்து தேன்பொத்தை செல்லும் குறுக்கு சாலையில் பாண்டியம்மாள் எனபவர் சொந்தமாக தேங்காய் கூந்தல் தொழிற்சாலை நடத்தி வருகிறார்.

  இந்த தொழிற்சாலையில் பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 10-க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். தேங்காயில் இருந்து எடுக்கப்படும் கூந்தலை பிரித்து கயிறு திரிப்பதற்கான மூலப்பொருள் தயாரிக்கும் பணியில் இந்த தொழிற்சாலை ஈடுபட்டு வருகிறது.

  இவ்வாறு பிரித்தெடுக்கப்பட்ட சுமார் 3 லட்சம் மதிப்பிலான கூந்தல் சவரி பிரிக்கப்பட்டு சேமிக்கப்பட்டிருந்தது. இந்த தொழிற்சாலையில் திடீரென தீ பற்றி எரியத் துவங்கியது. தீ வேகமாக பரவுவதை கட்டுப்படுத்த பணியாளர்கள் தீயை அணைக்க முயன்றனர் அதிகமாக தீ பரவியதால் செங்கோட்டை தென்காசி பகுதிகளில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் கொண்டுவரப்பட்டு தீயை அணைக்க முயன்று வருகின்றனர். தீயணைப்பு வாகனங்களில் தண்ணீர் காலியானதால் தனியார் வாகனங்களில் தண்ணீர் கொண்டு வந்து தீயை அணைக்கும் பணி தீவீரப்படுத்தப்பட்டுள்ளது.
  Next Story
  ×