search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தலைவர் இல்லாமல் தேர்தல் பணி தொடங்கியது: மத்திய சென்னையில் விருப்ப மனு வாங்க காங்கிரஸ் முடிவு
    X

    தலைவர் இல்லாமல் தேர்தல் பணி தொடங்கியது: மத்திய சென்னையில் விருப்ப மனு வாங்க காங்கிரஸ் முடிவு

    தமிழக காங்கிரசில் தலைவர் இல்லாமல் உள்ளாட்சி தேர்தல் பணியை மாவட்ட தலைவர்கள் தொடங்க ஆரம்பித்துள்ளனர். மத்திய சென்னையில் விருப்ப மனு வாங்குகிறார்கள்.
    சென்னை:

    தமிழகத்தில் அடுத்த மாதம் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. அரசியல் கட்சிகள் தேர்தலை சந்திப்பதற்கான ஆயத்த பணிகளை தொடங்கிவிட்டன. காங்கிரசில் கடந்த 3 மாதமாக தலைவர் பதவி நியமிக்கப்படாததால் கூட்டணி உள்ளிட்ட தேர்தல் நடவடிக்கை எதுவுமே தொடங்கவில்லை.

    அனைத்து மாவட்டங்களிலும் தொண்டர்கள் மத்தியில் சோர்வு ஏற்பட்டுள்ளது. தேர்தலை சந்திப்பது எப்படி? என்று கவலையில் இருக்கிறார்கள்.

    இந்த நிலையில் தலைவர் இல்லாவிட்டாலும் தயாராக இருப்போம் என்ற எண்ணத்தில் மாவட்ட தலைவர்கள் தேர்தல் பணியை தொடங்க ஆரம்பித்துள்ளார்கள்.

    மத்திய சென்னை மாவட்டத்தில் மாவட்ட தலைவர் ரங்கபாஷ்யம் தலைமையில் கொளத்தூர் தொகுதி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று நடந்தது.

    நாளை எழும்பூர், வில்லிவாக்கம் தொகுதிகளிலும் நாளை மறுநாள் அண்ணாநகர், திருவல்லிக்கேணி தொகுதிகளிலும் ஆலோசனை கூட்டம் நடக்கிறது. இந்த கூட்டத்தில் உள்ளாட்சி தேர்தலை சந்திப்பது எப்படி? தேர்தலுக்கு பூத் கமிட்டி அமைப்பது பற்றி விவாதிக்கப்பட்டது.

    தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள விருப்ப மனு தயார் செய்ய கேட்டுக் கொள்ளப்பட்டது. ஆலோசனை கூட்டங்கள் முடிந்ததும் விருப்ப மனுக்கள் வாங்க திட்டமிட்டுள்ளதாக மாவட்ட தலைவர் ரங்க பாஷ்யம் தெரிவித்தார்.
    Next Story
    ×