என் மலர்

  செய்திகள்

  மண்ணில் புதைந்து போராட்டம்ஈடுபட்ட விவசாயி படத்தில் காணலாம்
  X
  மண்ணில் புதைந்து போராட்டம்ஈடுபட்ட விவசாயி படத்தில் காணலாம்

  காவிரி ஆற்றில் உரிய தண்ணீர் திறக்க கோரி திருச்சி விவசாயிகள் மண்ணில் புதைந்து போராட்டம்: 25 பேர் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  காவிரி ஆற்றில் தமிழகத்திற்கு உரிய தண்ணீரை திறந்து விடக்கோரி திருச்சியில் இன்று விவசாயிகள் மண்ணில் புதைந்து போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

  திருச்சி:

  காவிரி ஆற்றில் தமிழகத்திற்கு உரிய தண்ணீரை திறந்து விடக்கோரி திருச்சியில் இன்று விவசாயிகள் மண்ணில் புதைந்து போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

  உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி காவிரி ஆற்றில் தமிழகத்திற்கு உரிய தண்ணீரை திறந்து விட வேண்டும், மத்திய அரசு விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், இந்தியா முழுவதும் நதிகளை இணைக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினர் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

  கடந்த வாரம் காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடக்கோரி திருச்சியில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது விவசாயிகளின் பரிதாப நிலையை விளக்கும் வகையில் தூக்குமாட்டிக்கொண்டும், அரை நிர்வாண கோலத்திலும், மொட்டை அடித்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

  இந்த நிலையில் இன்று காலை தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் 3 பெண்கள் உள்பட 25 விவசாயிகள் திருச்சி அம்மா மண்டபம் காவிரி ஆற்றிற்கு சென்றனர். ஆற்றின் நடுவே சென்ற அவர்கள், திடீரென ஆற்று மணலில் 5 அடிக்கு குழி தோண்டினர்.

  பின்னர் உடல் முழுவதையும் மண்ணில் புதைத்தவாறும், தலை மட்டும் வெளியில் தெரியும்படியும் மண்ணில் புதைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

  இதுகுறித்த தகவல் அறிந்ததும் கோட்டை போலீஸ் உதவி கமி‌ஷனர் அங்குசாமி, இன்ஸ்பெக்டர்கள் ரமேஷ், வெங்கடேஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். ஆனால் விவசாயிகள் போராட்டத்தை கைவிட மறுத்து விட்டனர். இதையடுத்து 25 பேரையும் மண்ணில் இருந்து மீட்டு போலீசார் கைது செய்தனர்.

  கைதான சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு நிருபர்களிடம் கூறும்போது, காவிரி ஆற்றில் தண்ணீர் திறக்காததன் காரணமாக டெல்டா மாவட்டத்தில் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி காவிரி ஆற்றில் உரிய தண்ணீரை திறந்து விட வேண்டும். விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்யாதது, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது போன்ற பிரச்சினைகளில் மத்திய அரசு மவுனமாக உள்ளது. கர்நாடக அரசும் வஞ்சிக்கிறது.

  எனவே டெல்டா மாவட்டத்தில் விவசாயிகள் நலனுக்கு உண்டான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்றார்.

  Next Story
  ×