என் மலர்

  செய்திகள்

  ஆடு, கோழி மேய்ந்த தகராறில் பெண்ணை கத்தியால் குத்தி கொன்ற முதியவர் கைது
  X

  ஆடு, கோழி மேய்ந்த தகராறில் பெண்ணை கத்தியால் குத்தி கொன்ற முதியவர் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஆடு, கோழி மேய்ந்த தகராறில் பெண்ணை கத்தியால் குத்தி கொன்ற முதியவர் கைது

  அன்னூர்:

  அன்னூர் அருகே செல்லனூர் பகுதியை சேர்ந்தவர் அழகேசன். நில புரோக்கர். இவரது மனைவி தங்கமணி (வயது 43). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.

  இவர்கள் 2 பேருக்கும் திருமணமாகி விட்டது. தங்கமணி வீட்டில் ஆடு, கோழிகளை மேய்த்து பிழைப்பு நடத்தி வந்தார்.

  தங்கமணி வீடு அருகே தச்சு தொழிலாளி காளியப்பன் (75) என்பவர் வசித்து வந்தார்.

  இந்த நிலையில் தங்க மணி வளர்த்து வந்த ஆடு, கோழிகள் காளியப்பன் வீட்டு முன்பு உள்ள செடிகளை தின்று சேதப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் காளியப்பனுக்கும், தங்கமணிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

  இதேபோல் நேற்று இரவும் இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டது,

  இதில் ஆத்திரம் அடைந்த காளியப்பன், தான் வைத்திருந்த கத்தியால் தங்கமணியை சரமாரியாக குத்தினார். பலத்த காயம் அடைந்த தங்கமணி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார்.

  இதுகுறித்து அன்னூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். தங்கமணி உடலை கைப்பற்றி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

  இதுதொடர்பாக முதியவர் காளியப்பனை போலீசார் கைது செய்தனர்.

  Next Story
  ×