என் மலர்

  செய்திகள்

  ஆற்காடு அருகே டாஸ்மாக் ஊழியரை வழிமறித்து ரூ.2 லட்சம் பறிப்பு
  X

  ஆற்காடு அருகே டாஸ்மாக் ஊழியரை வழிமறித்து ரூ.2 லட்சம் பறிப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஆற்காடு அருகே டாஸ்மாக் ஊழியரை வழிமறித்து ரூ.2 லட்சம் பறித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
  ஆற்காடு:

  வாலாஜா அடுத்த அம்மூர் ரோடு பகுதியை சேர்ந்தவர் பாண்டியன் (வயது 40), ரத்தினகிரியை அடுத்த பூட்டுத்தாக்கில் உள்ள டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக வேலை பார்த்து வருகிறார்.

  இவர் நேற்று முன்தினம் இரவு 10-30 மணிக்கு டாஸ்மாக் கடையை பூட்டிவிட்டு 3 நாட்கள் டாஸ்மாக் கடையில் விற்பனை செய்த ரூ.2 லட்சத்தை எடுத்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் பூட்டுத்தாக்கில் இருந்து வாலாஜா நோக்கி வந்தார்.

  அப்போது நந்தியாலம் பூஞ்சோலை நகர் அருகே வந்தபோது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த 3 நபர்கள் பாண்டியன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளை வழிமறித்து அவரிடமிருந்த ரூ.2 லட்சத்தை பறித்துக் கொண்டு தப்பிவிட்டனர். இதுகுறித்து அவர் ரத்தினகிரி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
  Next Story
  ×