என் மலர்

  செய்திகள்

  திருவெறும்பூர் அருகே வீட்டின் ஓட்டை உடைத்து 10 பவுன் நகை கொள்ளை
  X

  திருவெறும்பூர் அருகே வீட்டின் ஓட்டை உடைத்து 10 பவுன் நகை கொள்ளை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திருவெறும்பூர் அருகே வீட்டின் ஓட்டை உடைத்து 10 பவுன் நகையை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
  திருவெறும்பூர்:

  திருச்சி திருவெறும்பூர் மலைக்கோவில் வ.உ.சி. நகரை சேர்ந்தவர் குருசாமிபிள்ளை. இவரது மனைவி ரத்தினம்பாள்(வயது65). இருவரும் நேற்று இரவு வீட்டில் தூங்கி கொண்டு இருந்தனர். அப்போது மர்ம நபர்கள் வீட்டின் ஓட்டை பிரித்து உள்ளே இறங்கி உள்ளனர். பின்னர் அவர்கள் தூங்கி கொண்டு இருந்த ரத்தினம்பாள் கழுத்தில் கிடந்த 10 பவுன் நகையை பறித்து சென்றனர்.

  காலையில் எழுந்து பார்த்த ரத்தினம்பாள் கழுத்தில் செயின் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் வீட்டின் ஓடுகள் பிரிக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது.

  இதையடுத்து அவர் திருவெறும்பூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
  Next Story
  ×