என் மலர்

  செய்திகள்

  ராசிபுரத்தில் 324 பருத்தி மூட்டைகள் ரூ.6 லட்சத்திற்கு ஏலம்
  X

  ராசிபுரத்தில் 324 பருத்தி மூட்டைகள் ரூ.6 லட்சத்திற்கு ஏலம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ராசிபுரத்தில் 324 சுரபி ரக பருத்தி மூட்டைகள் ரூ.6 லட்சத்திற்கு ஏலம் விடப்பட்டது. ஒரு குவிண்டால் குறைந்தபட்ச விலையாக ரூ.5305-க்கும், அதிகப்பட்சமாக ரூ.6464-க்கும் ஏலம் விடப்பட்டது.
  ராசிபுரம்:

  ராசிபுரத்தில் உள்ள ஆர்.சி.எம்.எஸ். சொசைட்டி சார்பில் ராசிபுரம் அருகேயுள்ள அக்கரைப்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க வளாகத்தில் பருத்தி ஏலம் நேற்று (திங்கட்கிழமை)நடந்தது.

  இந்த பருத்தி ஏலத்தில் பாலமேடு, பாலப்பட்டி, தொட்டியப்பட்டி, அக்கரைப்பட்டி, சவுதாபுரம், மாமுண்டி உள்பட பல கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் பருத்தியை ஏலத்திற்கு கொண்டு வந்திருந்தினர்.

  அதேபோல் வியாபாரிகள் அவினாசி, அன்னூர், கொங்கணாபுரம், ஆத்தூர், எடப்பாடி, சேலம், ஈரோடு போன்ற பகுதிகளில் இருந்து வந்திருந்தனர். நேற்று நடந்த பருத்தி ஏலத்திற்கு சுரபி ரக பருத்தியை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர். இந்த ஏலத்தில் 324 சுரபி ரக பருத்தி மூட்டைகள் ரூ.6 லட்சத்திற்கு ஏலம் விடப்பட்டது. ஒரு குவிண்டால் குறைந்தபட்ச விலையாக ரூ.5305-க்கும், அதிகப்பட்சமாக ரூ.6464-க்கும் ஏலம் விடப்பட்டது.

  கடந்த வாரத்தை விட இந்த வாரம் பருத்தியை குறைந்த அளவில் விவசாயிகள் ஏலத்திற்கு கொண்டு வந்திருந்தனர். ஆனால் விலை சற்று கூடுதலாக இருந்தது.
  Next Story
  ×