என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சுரங்கப்பாதையில் செயினை பறித்த கொள்ளையனுடன் போராடிய பெண்
Byமாலை மலர்6 Sep 2016 8:13 AM GMT (Updated: 6 Sep 2016 8:13 AM GMT)
ஸ்டேன்லி அரசு மருத்துவமனை அருகே உள்ள சுரங்க பாதையில் பெண்ணிடம் இருந்து செயின் பறித்து கொண்டு கொள்ளையன் தப்பி ஓட்டம்
ராயபுரம்:
ஸ்டேன்லி அரசு மருத்துவமனை அருகே உள்ள சுரங்க பாதையில் அடிக்கடி நகை பறிப்பு சம்பவங்கள் நடந்து வருகிறது.
பழைய வண்ணாரப் பேட்டை பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் மாதவி. இவர் ராயபுரத்தில் உள்ள ஆதி திராவிடர் மாணவியர் விடுதியில் சமையல் வேலை செய்து வருகிறார்.
நேற்று மாலை 3 மணி அளவில் மாதவி ஸ்டேன்லி ஆஸ்பத்திரி அருகே உள்ள சுரங்க பாதையில் நடந்து சென்றார். அப்போது பின்னால் வந்த மர்ம நபர் ஒருவர் மாதவி கழுத்தில் கிடந்த 5 பவுன் நகையை பிடித்து இழுத்தான்.
மாதவியும் நகையை பிடித்து இழுத்து கொண்டு கொள்ளையனுடன் போராடினார். அதில் செயின் அறுந்து கொள்ளையன் கையில் 3 பவுனும், மாதவி கையில் 2 பவுனும் சிக்கியது. 3 பவுன் நகையுடன் கொள்ளையன் ஓடினான். அவனை பிடிக்க மாதவியும் துரத்தி சென்றார். கொள்ளையன் வண்ணாரப்பேட்டை ரெயில்வே தண்டவாளம் வழியாக தப்பி ஓடி விட்டான்.
இதுகுறித்து பழைய வண்ணாரப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார். இதே சுரங்கபாதையில் கடந்த வாரம் மல்லிகா என்ற பெண்ணிடம் 5 பவுன் நகையை பறித்து சென்றனர் என்பது குறிப்பிடதக்கது.
தொடர்ந்து இந்த சுரங்க பாதையில் செயின் பறிப்பு சம்பவங்கள் நடப்பதால் போலீசார் இங்கு ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என பொது மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Next Story
×