என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காவிரியில் தண்ணீர் விட சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு: தமிழக விவசாய சங்க தலைவர்கள் கருத்து
Byமாலை மலர்6 Sep 2016 8:07 AM GMT (Updated: 6 Sep 2016 8:07 AM GMT)
காவிரியில் 10 நாட்களுக்கு தொடர்ந்து 15 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறந்து விட வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.இது தொடர்பாக தமிழக விவசாயிகள் சங்க தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
தஞ்சாவூர்:
காவிரியில் 10 நாட்களுக்கு தொடர்ந்து 15 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறந்து விட வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.
இது தொடர்பாக தமிழக விவசாயிகள் சங்க தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அதன் விவரம் வருமாறு:-
தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலர் சாமி. நடராஜன்:-
சம்பா சாகுபடிக்காக காவிரியில் நமக்குக் கிடைக்க வேண்டிய 54 டி.எம்.சி. தண்ணீர் கோரி தொடுக்கப்பட்ட வழக்கில் இடைக்கால நிவாரணமாக 12.50 டி.எம்.சி. தண்ணீர் வழங்குமாறு கர்நாடக அரசுக்கு உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ள ஆணை வரவேற்கத்தக்கது.
சம்பா சாகுபடிக்கு உடனடியாக 25 டி.எம்.சி. தண்ணீர் தேவைதான். ஒன்றுமே தர முடியாது எனக் கர்நாடக அரசு கூறி வந்த நிலையில், இந்த 12.50 டி.எம்.சி. தண்ணீரை வழங்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதை இடைக்கால நிவாரணமாக வரவேற்க வேண்டும்.
அடுத்தகட்ட வழக்கு விசாரணையில் நமக்குத் தேவையான தண்ணீர் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம். இந்தத் தண்ணீர் சாகுபடியைத் தொடங்குவதற்கு மட்டுமே போதுமானது. எனவே, மீதமுள்ள தண்ணீரை பெறுவதற்குத் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சம்பா சாகுபடிக்காகத் தமிழக அரசு வருகிற 10-ந் தேதி முதல் 15-ந் தேதிக்குள் மேட்டூர் அணையைத் திறக்க வேண்டும். செப்டம்பர் 15-ந் தேதி அளவில் சம்பா சாகுபடியைத் தொடங்கினால் வடகிழக்குப் பருவ மழையிலிருந்து பயிர்களைக் காப்பாற்ற முடியும்.
தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்புச் சங்கச் செயலர் சுவாமிமலை சுந்தர. விமல்நாதன்:-
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை போதுமான அளவுக்கு பெய்யவில்லை. வடகிழக்குப் பருவமழை எந்த அளவுக்குக் கைக்கொடுக்கும் என உறுதியாக கணிக்க இயலாத நிலையில் உள்ளோம்.
இந்நிலையில் கிடைக்கும் நீரைக் கொண்டு சம்பா சாகுபடி தொடங்குவது குறித்து தமிழக அரசு ஒரு இறுதியான முடிவுக்கு வர வேண்டுமானால், தஞ்சாவூரில் உடனடியாக பொதுப்பணி, வேளாண்மைத் துறை அமைச்சர்கள் தலைமையில் அவசர ஆலோசனைக் கூட்டத்தை நடத்தி முடிவுக்கு வர வேண்டும்.
உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவையாவது கர்நாடக அரசு ஒழுங்காக மதித்து, தாமதமின்றி உடனடியாக தண்ணீரை திறந்து விட வேண்டும்.
தமிழக விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் மணிமொழியன்:-
12.50 டி.எம்.சி. தண்ணீர் தர உத்தரவிட்டிருப்பது மழுங்கடிக்கும் வேலை. தமிழகத்துக்கு இழைக்கப்படும் அநீதி. பற்றாக்குறை காலத்தில் நீரை எவ்வாறு பகிர்வது என நடுவர் மன்றத் தீர்ப்பில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. எனவே, காவிரி மேலாண்மை வாரியமும், ஒழுங்குமுறைக் குழுவையும் விரைந்து அமைக்க வேண்டும்.
காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் மணியரசன்:-
காவிரி பிரச்சனையில் நடுவர்மன்ற இறுதி தீர்ப்பின் படி கர்நாடக அணைகளில் இருப்பில் உள்ள காவிரி நீரை தமிழ்நாட்டுக்கு உரிய விகிதப்படி கர்நாடகம் திறந்து விடுவதற்கு உச்சநீதிமன்றம் ஆணையிட்டு இருக்க வேண்டும். கர்நாடக அரசு தன் அணைகளில் உள்ள நீரைக் குறைத்துக்காட்டுகிறது.
ஒரு வார காலமாக கர்நாடக அணைகளில் நீர் இருப்பு கிட்டத்தட்ட ஒரே அளவில் இருக்கிறது. கர்நாடக அரசு நீர் தேக்கங்களில் உள்ள 44.79 சதவீதம் நீரை உடனடியாக திறந்துவிட உச்ச நீதிமன்றம் கர்நாடக அரசுக்கு ஆணையிட்டு இருக்க வேண்டும். வருகிற 16-ந் தேதி மீண்டும் விசாரணை நடைபெறும் என உச்ச நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது. அதற்குள் தமிழக முதல்-அமைச்சர் விரைந்து செயல்பட்டு தமிழ் நாட்டுக்குரிய தண்ணீரைப்பெற வேண்டும்.
தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன்:-
காவிரியில் இருந்து தமிழ்நாட்டுக்கு நாள்தோறும் வினாடிக்கு 15,000 கனஅடி வீதம் 10 நாட்களுக்குத் தண்ணீர் திறந்துவிடுமாறு கர்நாடக மாநிலத்துக்கு உச்ச நீதிமன்றம் ஆணைப் பிறப்பித்திருப்பது வரவேற்கத்தக்கது.
உடனடியாக காவிரி மேலாண்மை வாரியத்தை அமைப்பதற்கு தேவையான முயற்சிகளை முதல்வர் ஜெயலலிதா மேற்கொள்ள வேண்டும். அவருக்கு அனைத்து உழவர் சங்கங்களும், அரசியல் கட்சிகளும் ஆதரவு தர வேண்டும்.

Next Story
×