search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    சென்னையில் கர்நாடக நிறுவனங்களில் போலீஸ் கண்காணிப்பு
    X

    சென்னையில் கர்நாடக நிறுவனங்களில் போலீஸ் கண்காணிப்பு

    சென்னையிலும் அசம்பாவித சம்பவங்கள் நடந்து விடக்கூடாது என்பதற்காக கர்நாடக நிறுவனங்கள் இருக்கும் பகுதிகளில் போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர்.
    சென்னை:

    வினாடிக்கு 15 ஆயிரம் கன அடி வீதம் 10 நாட்களுக்கு காவிரியில் தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று கர்நாடகத்துக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் கன்னட அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

    இதனால் கர்நாடகா மற்றும் தமிழக எல்லைகளில் பதட்டம் நிலவுகிறது. பஸ் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. காவிரியில் தண்ணீர் திறந்து விட மறுக்கும் கர்நாடகாவை கண்டித்து தமிழகத்திலும போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. தஞ்சையில் கர்நாடக அரசு பஸ்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன.

    இதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர்.

    சென்னையிலும் அசம்பாவித சம்பவங்கள் நடந்து விடக்கூடாது என்பதற்காக கர்நாடக நிறுவனங்கள் இருக்கும் பகுதிகளில் போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர்.

    சென்னையில் தி.நகர், கே.கே.நகர், வளசரவாக்கம், அயனாவரம் உள்ளிட்ட இடங்களில் உள்ள அம்மாநில நிறுவனங்களில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    கர்நாடக வங்கி, பள்ளி மற்றும் கர்நாடக மாநிலத்தவர்கள் நடத்தும் ஓட்டல்கள் அருகிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
    Next Story
    ×