search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சேலம் ரெயிலில் ரூ.6 கோடி கொள்ளை: வங்கிகளில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை
    X

    சேலம் ரெயிலில் ரூ.6 கோடி கொள்ளை: வங்கிகளில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை

    சேலத்தில் இருந்து சென்னைக்கு சென்ற எழும்பூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் எடுத்து செல்லப்பட்ட 6 கோடி பணம் கொள்ளைப்போனது குறித்து வங்கிகளில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை மேற்கொண்டனர்
    சேலம்:

    சேலத்தில் இருந்து சென்னைக்கு சென்ற எழும்பூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் எடுத்து செல்லப்பட்ட 6 கோடி பணம் கொள்ளைப்போனது. இந்தியன் வங்கி இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு சொந்தமான இந்த பணத்தை கொள்ளையடித்தது யார்? என்று சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    சேலத்தில் முகாமிட்டு சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரெண்டு நாகஜோதி, சிறப்பு புலனாய்வு அதிகாரி அமித்குமார்சிங் ஆகியோர் விசாரித்து வந்தனர். நேற்று இவர்கள் சென்னை சென்றனர். கூடுதல் சூப்பிரெண்டு ஸ்டீபன் ஏசுபாதம் மற்றும் சி.பி. சி.ஐ.டி. போலீசார் சேலத்தில் தொடர்ந்து விசாரித்தும் வருகிறார்கள்.

    கொள்ளைப்போன பணத்தை திருடர்கள் எங்கும் மாற்ற முயற்சி மேற் கொள்ள கூடும் என்பதை அறிந்த சி.பி.சி.ஐ.டி. போலீசார் தமிழகம் முழுவதும் அனைத்து வங்கி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து அதிக தொகையை யாரும் கொண்டு வந்து டெபாசிட் செய்தார்களா? என்றும் கிழிந்த நோட்டுக்களை மொத்தமாக யாரும் மாற்ற முயற்சிக்கிறார்களா? என்றும் கண்காணித்து வருகிறார்கள்.

    சேலத்தில் உள்ள அனைத்து வங்கி அதிகாரிகளையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் சந்தித்து கொள்ளை குறித்து தெரிவித்து யாரும் அதிக தொகையை டெபாசிட் செய்தால் உடனே தகவல் தெரிவிக்குமாறு கேட்டு கொண்டுள்ளனர்.

    ஏ.டி.எம். மையங்களில் பணம் டெபாசிட் செய்யும் எந்திரங்களில் யாரும் கிழிந்த நோட்டுக்களை செலுத்துகிறார்களா? என்றும் விசாரிக்கப்பட்டு வருகிறது. சேலத்தில் பலர் கிழிந்த நோட்டுக்களை வாங்கி பின்னர் இந்த பணத்தை வங்கிகளில் கொடுத்து வேறு பணத்தை பெற்றுக்கொள்வார்கள். இவர்கள் யார்-யார்? என பட்டியல் எடுத்து தற்போது இவர்களிடமும் விசாரணை நடக்கிறது.
    Next Story
    ×