search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராதாபுரம் அருகே பெண் டெய்லர் கடத்தல்: ஒடிசா வாலிபருக்கு வலைவீச்சு
    X

    ராதாபுரம் அருகே பெண் டெய்லர் கடத்தல்: ஒடிசா வாலிபருக்கு வலைவீச்சு

    ராதாபுரம் அருகே பெண் டெய்லரை ஒடிசா வாலிபர் கடத்தி சென்றதால் இருவரையும் போலீசார் தேடி வருகிறார்கள்.
    நெல்லை:

    நெல்லை மாவட்டம் பணகுடியை சேர்ந்தவர் பால்ராஜ். இவரது மனைவி வசந்தி (வயது33). இவர்கள் குடும்பத்துடன் ராதாபுரம் அருகே உள்ள கோவிலான்குளத்தில் தங்கி உள்ளனர். அங்கிருந்து வசந்தி, வடக்கு கும்பிளம்பாடு பகுதியில் உள்ள டெய்லர் கடைக்கு சென்று  டெய்லராக வேலை பார்த்து வந்தார்.

    அப்போது அந்த கடைக்கு, அந்த பகுதியில் கூலி வேலை செய்து வரும் ஒடிசா மாநிலம் ஜகல்பேட் பகுதியை சேர்ந்த மாணிக்ஷா என்ற வாலிபர் அடிக்கடி வந்து சென்றுள்ளார். இதில் வசந்திக்கும், ஒடிசா வாலிபர் மாணிக்ஷாவுக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டது.

    இதை அறிந்த வசந்தி குடும்பத்தினர் அவரை கண்டித்துள்ளனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் வேலைக்கு சென்ற வசந்தி வீடு திரும்பவில்லை. அவரை காணவில்லை என்று கணவர் பால்ராஜ், ராதாபுரம் போலீசில் புகார் செய்தார்.

    போலீசார் விசாரணையில் வசந்தியை ஒடிசா வாலிபர் மாணிக்ஷா கள்ளக்காதலில் கடத்தி சென்றது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    Next Story
    ×