என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வாக்காளர் பட்டியல் திருத்தும் பணியில் தி.மு.க.வினர் ஈடுபட வேண்டும்: சுரேஷ்ராஜன் வேண்டுகோள்
Byமாலை மலர்28 Aug 2016 3:27 PM GMT (Updated: 28 Aug 2016 3:27 PM GMT)
வாக்காளர் பட்டியல் திருத்தும் பணியில் தி.மு.க.வினர் ஈடுபட வேண்டும் என்று சுரேஷ்ராஜன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நாகர்கோவில்:
தி.மு.க. குமரி மாவட்ட செயலாளரும், எம்.எல்.ஏ. வுமான சுரேஷ் ராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரைப்படி 2017-ம் ஆண்டிற்கான வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தம் நடைபெற உள்ளது. அதன்படி வரைவு வாக்காளர் பட்டியல் அடுத்த மாதம் 1-ந்தேதி அன்று வெளியிடப்படுகிறது.
வாக்காளர் பட்டியல் தொடர்பான புகார்கள் மற்றும் கோரிக்கை மனுக்களை அடுத்த மாதம் 1-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை கொடுக்கலாம். வாக்காளர் பட்டியல் கிராமசபை கூட்டங்களில் வெளியிடப்பட்டு அடுத்த மாதம் 10 மற்றும் 24-ந்தேதிகளில் சரிபார்க்கப்படும்.
மேலும் அடுத்த மாதம் 11 மற்றும் 25-ந்தேதிகளில் வாக்குச்சாவடியில் சிறப்பு முகாம்கள் நடைபெறுகிறது. பின்னர் இறுதி வாக்காளர் பட்டியல் அடுத்த ஆண்டு ஜனவரி 5-ந்தேதி வெளியிடப்படுகிறது.
எனவே ஒன்றிய, நகர, பேரூர், ஊராட்சி. கிளை மற்றும் வட்ட செயலாளர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் செய்தல், போன்ற பணிகளில் உடனடியாக ஈடுபட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Next Story
×