search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    கார் மோதி என்ஜினீயர் பலி: இளம்பெண் மீது வழக்குப்பதிவு
    X

    கார் மோதி என்ஜினீயர் பலி: இளம்பெண் மீது வழக்குப்பதிவு

    நடைபயிற்சிக்கு சென்ற என்ஜினீயர் மீது கார் மோதியதில் என்ஜினீயர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    கோவை:

    கோவை பீளமேடு மேத்தா லே-அவுட்டை சேர்ந்தவர் ஸ்ரீராம் (வயது 37). என்ஜினீயர். இவர் சம்பவத்தன்று கொடிசியா சாலையில் நடை பயிற்சி சென்று கொண்டு இருந்தார்.

    அப்போது அந்த வழியாக காளப்பட்டியை சேர்ந்த மோகன்ராஜ் என்பவரது மகள் இந்துஜா (22) தனது காரில் வந்தார். கார் திடீரென கட்டுப்பாடடை இழந்து ரோட்டில் நடந்து சென்று கொண்டு இருந்த ஸ்ரீராம் மீது மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்ட அவருக்கு தலை மற்றும் உடலில் பலத்த காயம் ஏற்பட்டது. அப்போது அந்த வழியாக சென்றவர்கள் ஸ்ரீராமை மீட்டு அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து கிழக்கு போக்குவரத்து புலனாய்வு சப்-இன்ஸ்பெக்டர் பக்தவசலம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×