search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    வண்ணாரப்பேட்டையில் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி
    X

    வண்ணாரப்பேட்டையில் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி

    வண்ணாரப்பேட்டையில் மர்ம நபர்கள் பூட்டியிருந்த வீட்டை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டனர்.
    ராயபுரம்:

    புதுவண்ணாரப்பேட்டை போலீஸ் ஏட்டு ரேனியஸ் இன்று அதிகாலை 2 மணியளவில் புதுவண்ணாரப்பேட்டை புச்சம்மாள் தெருவில் ரோந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது 3 பேர் மோட்டார் சைக்கிளில் வந்து பூட்டியிருந்த வீட்டை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டனர். போலீஸ் ஏட்டை பார்த்ததும் 3 பேரும் மோட்டார் சைக்கிளை போட்டு விட்டு தப்பி ஓடிவிட்டனர்.

    இதையடுத்து போலீஸ் ஏட்டு ரேனியஸ் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். சரியான நேரத்தில் போலீஸ் ஏட்டு ரோந்து சென்றதால் கொள்ளை முயற்சி தடுக்கப்பட்டது.
    Next Story
    ×