என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
பிறந்த நாளுக்கு துணி எடுத்து கொடுக்காததால் இளம்பெண் தற்கொலை
முத்தூர்:
மதுரை மாவட்டம் சமயநல்லூரை சேர்ந்தவர் முத்து. இவருக்கு 4 பெண் குழந்தைகள். இதில் இருவருக்கு திருமணமாகி விட்டது.
முத்து தன் குடும்பத்தினருடன் முத்தூர் அருகே உள்ள கருந்தேவி கவுண்டன் புதூரில் உள்ள ஒரு தோட்டத்து வீட்டில் தங்கி விவசாய வேலை பார்த்து வந்தார்.
முத்துவின் மகள் பஞ்சவர்ணத்துக்கு கடந்த 22-ந் தேதி பிறந்த நாள் ஆகும். இதையொட்டி பெற்றோர் நமக்கு புதிய துணி வாங்கி கொடுப்பார்கள் என்று ஆவலுடன் இருந்தார். ஆனால் பிறந்த நாளைக்கு புதிய துணி எடுத்து கொடுக்க வில்லையாம்.
இதனால் மனம் உடைந்த பஞ்சவர்ணம் 23-ந் தேதி தென்னை மரத்துக்கு பயன்படுத்தும் விஷ மாத்திரையை எடுத்து தின்று விட்டார். இதில் ஆபத்தான நிலையில் இருந்த அவரை மீட்டு முத்தூரில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
பிறகு மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பஞ்சவர்ணம் நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தார்.
இந்த சம்பவம் குறித்து வெள்ளகோவில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.