என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
கொடைக்கானலில் பலத்த மழை
கொடைக்கானல்:
கொடைக்கானலில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் குளுகுளு சீசன் நிலவுகிறது. இந்த ஆண்டு வழக்கத்திற்கு மாறாக கோடை காலம் முடிந்தபின்னரும் வெயில் சுட்டெரிக்கிறது. இதனால் கொடைக்கானலுக்கு சீசன் முடிந்து பின்னரும் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.
கொடைக்கானலிலும் பகல்வேளையில் வெயில் தாக்கம் சற்று அதிகமாக இருந்தது. கடந்த சில 2 தினங்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. மேகமூட்டத்துடன் குளிர்ந்த காற்று வீசுவதால் சுற்றுலா பயணிகள் குளுகுளு சீசனை அனுபவித்தவாறு இயற்கை காட்சிகளை கண்டுகளித்து வருகின்றனர்.
நேற்று மாலை 2 மணிநேரம் பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. வெள்ளிநீர்வீழ்ச்சி, பாம்பாறு உள்ளிட்ட அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. சுற்றுலா பயணிகள் குடைபிடித்தவாறு ஏரிச்சாலை, கோக்கர்ஸ் வாக், பூங்கா உள்ளிட்ட பகுதிகளை சுற்றி பார்த்தனர்.
தொடர்ந்து பெய்த மழை காரணமாக கொடைக்கானலில் இரவு நேரத்தில் குளிர் அதிகரித்துள்ளது. இன்றும் மழை பெய்யக்கூடிய சூழல் உள்ளது.