என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
பட்ஜெட்டுக்கு இறுதி வடிவம் கொடுக்க விடிய, விடிய நடந்த அமைச்சரவை கூட்டம்
புதுச்சேரி:
புதுவை சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த 24-ந்தேதி தொடங்கியது. அன்றைய தினம் கவர்னர் கிரண்பேடி உரையாற்றினார்.
இதையடுத்து 25 மற்றும் 26-ந்தேதி கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெற்றது. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் சட்டசபை கூட்டம் நடைபெறவில்லை.
இந்த நிலையில் நாளை (திங்கட்கிழமை) காலை 9.30 மணிக்கு மீண்டும் சட்டசபை கூடுகிறது. நிதி பொறுப்பு வகிக்கும் முதல்-அமைச்சர் நாராயணசாமி பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.
புதிய காங்கிரஸ் அரசு பொறுப்பேற்று முதல்- அமைச்சர் நாராயணசாமி முதல் முறையாக தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் என்பதால் பல்வேறு அறிவிப்புகள் வெளியாகும் என கூறப்படுகிறது.
இதற்கிடையே முதல்- அமைச்சர் நாராயணசாமி பட்ஜெட் தொடர்பாக தொழில் அதிபர்கள், வியாபாரிகள், விவசாயிகள், மீனவர்கள் என பலதரப்பட்டவர்களிடம் ஆலோசனை நடத்தினார்.
நேற்று மாலை 6 மணி அளவில் பட்ஜெட்டுக்கு இறுதி வடிவம் கொடுக்க சட்டமன்றத்தில் அமைச்சரவை கூடியது. கூட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 4.30 மணி வரை நடைபெற்றது.
கூட்டத்தில் துறை வாரியாக நடைமுறையில் உள்ள திட்டம், நடை முறைப்படுத்த வேண்டிய திட்டம், கையிருப்பு நிதி, தேவையான நிதி என விரிவாக ஆலோசனை செய்யப்பட்டது.
மக்கள் பாதிக்கப்படாத வகையில் நலத் திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்திட தேவையான நிதியை மத்திய அரசிடம் பெறுவது குறித்து விரிவான ஆலோசனை மேற்கொண்டதாக கூறப்படுகிறது.