என் மலர்

  செய்திகள்

  மரக்காணம் அருகே தீயில் கருகி வாலிபர் பலி
  X

  மரக்காணம் அருகே தீயில் கருகி வாலிபர் பலி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மரக்காணம் அருகே தீயில் கருகி வாலிபர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

  மரக்காணம்:

  மரக்காணம் அருகே உள்ள வடஅகரம் பகுதியை சேர்ந்தவர் ராஜ சேகர் (வயது 33). கூலி தொழிலாளி. இன்னும் திருமணம் ஆகவில்லை. இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது.

  சம்பவத்தன்று ராஜசேகர் அளவுக்கு அதிகமாக மது குடித்து விட்டு வீட்டிற்கு வந்தார். சமை யல் செய்வதற்காக மண்எண்ணை ஸ்டவ் அடுப்பை பற்ற வைத்தார். திடீரென ஸ்டவ் வெடித்து ராஜசேகரின் உடல் முழுவதும் தீப்பற்றியது.

  அலறி துடித்த ராஜ சேகரை அக்கம் பக்கத்தினர் மீட்டு புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் ராஜசேகர் பரிதாபமாக இறந்தார்.

  மரக்காணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  Next Story
  ×