என் மலர்

  செய்திகள்

  குடியாத்தம் மோர்தானா அணையில் குளித்த வாலிபர் மூழ்கி பலி
  X

  குடியாத்தம் மோர்தானா அணையில் குளித்த வாலிபர் மூழ்கி பலி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  குடியாத்தம் மோர்தானா அணையில் குளித்த வாலிபர் மூழ்கி இறந்தார்.

  குடியாத்தம்:

  ஆந்திர மாநிலம் பலமனேர் அருகே உள்ள மண்டிபேட்டை கோட்டூரை சேர்ந்தவர் கோவிந்தன். இவருடைய மகன் சக்கரபாணி (வயது 27). இவருக்கு திருமணமாகி சுஜாதா என்ற மனைவியும், ஒரு மகள் மற்றும் ஒரு மகனும் உள்ளனர்.

  இந்த நிலையில் சக்கரபாணி நேற்று தனது நண்பர்கள் சிலருடன் குடியாத்தம் மோர்தானா அணையை சுற்றி பார்ப்பதற்காக வந்தார். அப்போது அணையின் தொட்டியில் தேங்கியிருந்த தண்ணீரில் இறங்கி குளித்தார்.

  நீச்சல் தெரியாததால் சக்கரபாணி தண்ணீரில் மூழ்கினார். இதுகுறித்து நண்பர்கள், குடியாத்தம் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர். தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். நேற்று மாலையில் சக்கரபாணி பிணமாக மீட்கப்பட்டார். பிரேத பரிசோதனைக்காக உடல் குடியாத்தம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து குடியாத்தம் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவநேசன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

  Next Story
  ×