என் மலர்

  செய்திகள்

  கன்னியாகுமரி லாட்ஜில் கேரள மாணவியை கடத்தி கற்பழித்த ஆட்டோ டிரைவர்
  X

  கன்னியாகுமரி லாட்ஜில் கேரள மாணவியை கடத்தி கற்பழித்த ஆட்டோ டிரைவர்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கன்னியாகுமரி லாட்ஜில் கேரள மாணவியை கடத்தி கற்பழித்த ஆட்டோ டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
  திருவனந்தபுரம் அருகே உள்ள ஆரியநாடு பகுதியைச் சேர்ந்தவர் அமித் மோகன் (வயது 25). ஆட்டோ டிரைவர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவரது செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது.

  அதில் பேசியவர் ஒரு பிளஸ்-1 பள்ளி மாணவி. அந்த அழைப்பு தவறுதலாக சென்றது தெரிந்ததும் மாணவி இணைப்பை துண்டித்து விட்டார். அதன்பிறகு அமித்மோகன் அந்த செல்போன் நம்பருக்கு மீண்டும் தொடர்பு கொண்டு அந்த பள்ளி மாணவியிடம் நட்பை வளர்த்துள்ளார்.

  அவர்களது நட்பு நாளடைவில் காதலாக மாறியது. அதன்பிறகு அந்த மாணவியை அமித்மோகன் நேரில் சந்தித்து பழக தொடங்கினர். மேலும் தனது ஆட்டோவில் பல்வேறு இடங்களுக்கு அந்த மாணவியை அழைத்துச் சென்றார். அப்போது அவரை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி கற்பழித்தார்.

  கன்னியாகுமரிக்கும் அந்த மாணவியை அழைத்து வந்து அங்குள்ள ஒரு லாட்ஜில் வைத்து உல்லாசமாக இருந்துள்ளார்.

  இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அந்த மாணவி திடீரென மாயமாகி விட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் இதுபற்றி ஆரியநாடு போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான மாணவியை தேடி வந்தனர்.

  இந்தநிலையில் கல்லம்பழம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் அந்த மாணவி அமித்மோகனுடன் தங்கியிருக்கும் தகவல் போலீசாருக்கு கிடைத்தது. உடனே போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். அப்போது அந்த மாணவியை ஆட்டோ டிரைவர் அமித்மோகன் கற்பழித்த தகவல்கள் வெளியானது.

  அந்த மாணவி மைனர் என்பதால் அவரது தாயார் கொடுத்த புகாரின் பேரில் ஆட்டோ டிரைவர் அமித் மோகனை போலீசார் கைது செய்தனர். கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் ஜெயிலில் அடைக்கப்பட்டார். மீட்கப்பட்ட மாணவி காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டு உள்ளார்.

  Next Story
  ×