என் மலர்

  செய்திகள்

  திருவண்ணாமலை அருகே 2 குழந்தைகளுடன் தாய் மாயம்
  X

  திருவண்ணாமலை அருகே 2 குழந்தைகளுடன் தாய் மாயம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திருவண்ணாமலை அருகே 2 குழந்தைகளுடன் தாய் மாயமானது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
  திருவண்ணாமலை:

  திருவண்ணாமலை அடுத்த கெங்காவரம் கொல்லக் கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் செல்வம் (வயது 35). இவரது மனைவி தவச்செல்வி (30). இவர்களுக்கு ராஜ்மதன் (7), ரட்சகன் (4) என்று 2 மகன்கள் உள்ளனர். ராஜ்மதன், அய்யப்பன் நகரில் உள்ள அரசுப் பள்ளியில் படித்து வருகிறான்.

  தினமும் காலையில் மகனை அழைத்துச் சென்று தவச்செல்வி பள்ளியில் விடுவார். கடந்த 3-ந் தேதி காலை வழக்கம் போல் ராஜ்மதனை பள்ளியில் விடுவதற்காக குழந்தை ரட்சகனை தூக்கிக் கொண்டு தவச்செல்வி அழைத்துச் சென்றார். மகனை பள்ளியில் விடவில்லை.

  2 குழந்தைகளுடனும் தவச்செல்வி திடீரென மாயமாகி உள்ளார். குழந்தைகளுடன் அவர் எங்கு சென்றார்? என்ன ஆனார்? என்பது தெரியவில்லை. இதுகுறித்து கணவர் செல்வம், கடலாடி போலீசில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் கிருஷ்ணகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
  Next Story
  ×