என் மலர்

  செய்திகள்

  பக்தர்கள் வசதிக்காக திண்டுக்கல்- பழனி புறவழிச்சாலை விரைவாக அமைக்கப்படும்: அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி
  X

  பக்தர்கள் வசதிக்காக திண்டுக்கல்- பழனி புறவழிச்சாலை விரைவாக அமைக்கப்படும்: அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பக்தர்கள் வசதிக்காக திண்டுக்கல்- பழனி புறவழிச்சாலை விரைவாக அமைக்கப்படும் என அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
  சென்னை:

  தி.மு.க உறுப்பினர் சக்கரபாணி சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.

  அப்போது ஒட்டன்சத்திரம். சத்திரப்பட்டி புறவழிச்சாலை விரைவாக அமைக்க வேண்டும். திண்டுக்கல்-பழனி புறவழிச்சாலையும் விரைவாக அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

  இதற்கு பொதுப்பணித் துறை, நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அளித்த பதில் வருமாறு:-

  ஒட்டன்சத்திரம் நகருக்கு புறவழிச்சாலை அமைக்க நிலம் கையகப்படுத்தும் பணிக்கு மத்திய அரசு ரூ16.77 கோடி நிதி ஒதுக்க நிர்வாக ஒப்புதல் அளித்தது. ஆனால் புதிய நில வழிகாட்டி மதிப்பு அடிப்படையில் விலையேற்றம் ஏற்பட்டதால் 5 கிராமங்களுக்கு மட்டுமே நில இழப்பீட்டு தொகை வழங்கப்பட்டது.

  எனவே திருத்திய மதிப்பீடாக ரூ.30.62 கோடிக்கு ஒப்புதல் பெறப்பட்டு நிலத்தை கையகப்படுத்தும் பணி நடந்து வருகிறது. இந்த புறவழிச்சாலையின் மொத்த மதிப்பீடு ரூ.235.91 கோடி. இதற்காக 22.1.2016 அன்று மத்திய அரசின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் விரைவில் நடைபெறும்.

  திண்டுக்கல்- பழனி புறவழிச்சாலை மொத்த தூரம் 42 கி.மீட்டர் இதுவரை இங்கு10 கி.மீ தூரம் சாலை அமைக்கப்பட்டுள்ளது. இது 4 வழி சாலையாக அமைக்கப்பட்டுள்ளது. முதல்-அமைச்சர் உத்தரவுபடி பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. விரைவில் இந்த சாலை அமைக்கப்படும் என்றார்.
  Next Story
  ×