search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எரித்துக் கொல்லப்பட்ட மாணவி நவீனாவின் குடும்பத்துக்கு ராமதாஸ் ஆறுதல்: பா.ம.க. சார்பில் ரூ.1 லட்சம் வழங்கினார்
    X

    எரித்துக் கொல்லப்பட்ட மாணவி நவீனாவின் குடும்பத்துக்கு ராமதாஸ் ஆறுதல்: பா.ம.க. சார்பில் ரூ.1 லட்சம் வழங்கினார்

    எரித்துக் கொல்லப்பட்ட மாணவி நவீனாவின் குடும்பத்துக்கு டாக்டர் ராமதாஸ் ஆறுதல் கூறினார். பின்னர் பா.ம.க. சார்பில் நவீனாவின் பெற்றோரிடம் ரூ.1 லட்சம் வழங்கினார்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் அருகே உள்ள வ.பாளையத்தை சேர்ந்த பிளஸ்-2 மாணவி நவீனாவை (வயது 17) விழுப்புரம் மாம்பழப்பட்டு அசோக்நகரை சேர்ந்த மினிபஸ் டிரைவர் செந்தில் ஒருதலையாக காதலித்தார். காதலை ஏற்க நவீனா மறுத்து விட்டார்.

    இதில் ஆத்திரம் அடைந்த செந்தில் கடந்த 30-ந் தேதி தனது உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்தார். எரியும் நெருப்புடன் மாணவி நவீனாவை கட்டிப்பிடித்தார். தீக்காயம் அடைந்த செந்தில் ஆஸ்பத்திரிக்கு கொண்டுசெல்லும் வழியில் இறந்தார். புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட நவீனா சிகிச்சை பலன் அளிக்காமல் கடந்த 3-ந் தேதி பரிதாபமாக இறந்தார்.

    வ.பாளையத்தில் அவரது உடலுக்கு வன்னியர் சங்க தலைவர் குரு மற்றும் பா.ம.க. நிர்வாகிகள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.

    இந்த நிலையில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று காலை 11 மணிக்கு வ.பாளையத்துக்கு வந்தார். எரித்து கொலை செய்யப்பட்ட மாணவி நவீனாவின் தந்தை அங்கப்பன், தாயார் நாவம்மாள் ஆகியோருக்கு ஆறுதல் கூறினார்.

    பின்னர் பா.ம.க. சார்பில் நவீனாவின் பெற்றோரிடம் ரூ.1 லட்சம் வழங்கினார். அவருடன் பா.ம.க. தலைவர் ஜி.கே. மணி, முன்னாள் எம்.பி. தன்ராஜ், மாநில துணை பொது செயலாளர் தங்கஜோதி, மாநில இளைஞர் அணி துணை செயலாளர் சிவக்குமார், மாவட்ட செயலாளர் பழனிவேல், மற்றும் நிர்வாகிகள் வந்திருந்தனர்.

    Next Story
    ×