search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மணலி-மாட்டு மந்தை மேம்பால பணியை முடிக்க கோரி த.மா.கா. ஆர்ப்பாட்டம்
    X

    மணலி-மாட்டு மந்தை மேம்பால பணியை முடிக்க கோரி த.மா.கா. ஆர்ப்பாட்டம்

    மணலி-மாட்டு மந்தை மேம்பால பணியை விரைந்து முடிக்க கோரி த.மா.கா. சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

    திருவொற்றியூர்:

    திருவொற்றியூர் மத்திய பகுதி த.மா.கா. சார்பில் மாநகராட்சி மண்டல அலுவலகம் முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு பகுதி தலைவர் நாகராஜ் தலைமை தாங்கினார்.

    மணலி - மாட்டு மந்தை மேம்பால பணியை விரைந்து முடிக்க வேண்டும். வடிவுடையம்மன் கோவில் குளத்தை சீரமைக்க வேண்டும். சண்முகநாதன் பூங்காவை சீரமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

    ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷம் எழுப்பினார்கள்.

    கட்சி நிர்வாகிகள் ஜோதிபிரகாசம், தேரடிதாமஸ், சோபின், சுந்தர்ராஜன், முருகன், ராகுல், சுதாகர் உள்பட 500-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×