search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆரணியில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்ற ஆட்டோ டிரைவர்
    X

    ஆரணியில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்ற ஆட்டோ டிரைவர்

    ஆரணியில் அரசு அதிகாரிகளுக்கு எதிராக மண்ணெண்ணை ஊற்றிக் கொண்டு தற்கொலை மிரட்டல் விடுக்கும் சம்பவம் அதிகரித்துள்ளது.

    ஆரணி:

    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே உள்ள 12 புத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆட்டோ டிரைவர் மோகன் (வயது 38). விடுதலைச் சிறுத்தை கட்சி பிரமுகர். இவர், ஆரணி கிராமிய காவல்நிலையத்துக்கு நேற்று முன்தினம் சென்றுள்ளார்.

    அப்போது சேவூர் கிராமத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அவரது இரு சக்கர வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். அந்த வாகனம் எனது நண்பர் கேசவனுடையது. அந்த வாகனத்தை விடுவிக்க வேண்டும் என்று கேட்டுள்ளார்.

    அப்போது அவருக்கும், காவல் ஆள்வாளர் சின்னராஜுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் மோகன் திடீரென ஆரணியில் உள்ள அம்பேத்கர் சிலை அருகே மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொள்ள முயன்றுள்ளார். அவரது செயலை ஆரணி நகர போலீசார் தடுத்து நிறுத்தி காவல் நிலைத்துக்கு அழைத்துச் சென்று, பின்பு விடுவித்தனர்.

    ஆரணியில் அதிகாரிகளை மிரட்டும் தோணியில் மண்ணெண்ணை ஊற்றிக் கொண்டு கடந்தவாரம் தற்கொலைக்கு முயன்றனர். வட்டாட்சியர் அலுவலகம் முன்பு வட்டாட்சியருக்கு எதிராக, மலையாம்பட்டு கிராமத்தில் வசிக்கும் விவசாயி, மண்ணெண்ணை ஊற்றிக்கொண்டு தற்கொலை மிரட்டல் விடுத்தார்.

    அரசுப் பணியில் உள்ளவர்கள், கடமையை உணர்ந்து பணியாற்றவில்லை. ஏழை மற்றும் நடுத்தர மக்களை அவமதிக்கின்றனர். இதற்கு கண்டனம் தெரிவித்து போராடுவதற்கு அவர்கள் முன்வரவில்லை.

    அவர்களுக்கு யாரும் துணை வருவதில்லை. அதே நேரத்தில், அரசியல் மற்றும் சங்கங்களின் முழு ஆதரவு பெற்றவர்கள், அதிகாரிகளை துணிந்து எதிர்க்கின்றனர். அது காவல் துறையாக இருந்தாலும் தயங்குவதில்லை. அந்த நிலைதான் இப்போது உள்ளது. இதற்கு தீர்வு காணவேண்டும் என்றனர்.

    Next Story
    ×