என் மலர்

  செய்திகள்

  பேரையூர் அருகே நகைக்காக மூதாட்டி கொலை?: போலீசார் விசாரணை
  X

  பேரையூர் அருகே நகைக்காக மூதாட்டி கொலை?: போலீசார் விசாரணை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பேரையூர் அருகே கிணற்றில் மூதாட்டி மர்மமான முறையில் இறந்து கிடந்தார். நகைக்காக அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

  பேரையூர்:

  மதுரை மாவட்டம் பேரையூர் அருகே உள்ள தும்மநாயக்கன் பட்டியை சேர்ந்தவர் மகாலிங்கம். இவரது மனைவி செல்லாயி (வயது 70). கணவர் ஏற்கனவே இறந்து விட்டார். பிள்ளைகளுக்கு திருமணமாகி விட்டதால் செல்லாயி தனியே வசித்து வந்தார்.

  இந்த நிலையில் செல்லாயி, அங்குள்ள கிணற்றில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரது காது அறுக்கப்பட்டு, அதில் இருந்த நகைகளை காணவில்லை. யாரோ மர்மநபர்கள் நகைக்காக செல்லாயியை கொன்று இருக்கலாம் என்று கருதப் படுகிறது.

  இதுகுறித்து பேரையூர் போலீசார் சந்தேகமரணம் என்று வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

  Next Story
  ×