என் மலர்

  செய்திகள்

  சென்னையில் அட்டகாசம் செய்த வழிப்பறி கொள்ளையர்கள் 8 பேர் கைது
  X

  சென்னையில் அட்டகாசம் செய்த வழிப்பறி கொள்ளையர்கள் 8 பேர் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சென்னையில் அட்டகாசம் செய்த வழிப்பறி கொள்ளையர்கள் 8 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

  ராயபுரம்:

  கொருக்குப்பேட்டை புட்டா தெருவை சேர்ந்தவர் நவின் ஐ.டி.ஐ. மாணவர். இவர் நேற்று கல்லூரிக்கு சென்று விட்டு கொருக்குப்பேட்டை மண்ணப்ப தெரு வழியாக இரவு வீடு திரும்பினார்.

  அப்போது 2 மர்ம நபர்கள் நவீனை தாக்கி அவரிடம் இருந்து ரூ.1000-ம் பறித்தனர். இதைபார்த்த அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து 2 மர்ம நபர்களையும் பிடித்து தர்ம அடி கொடுத்து கொருக்குப்பேட்டை போலீசில் ஒப்படைத்தனர்.

  விசாரணையில் பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்த கார்த்திக், ரமேஷ் என்பது தெரிய வந்தது. பின்னர் போலீசார் வழக்கு பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர்.

  கொருக்குப்பேட்டை மீனம்பாள் நகரை சேர்ந்த வர் முருகன் கூலி தொழிலாளி. இன்று அதிகாலையில் ஸ்டான்லி மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வரும் உறவினரை பார்க்க கொருக்குப்பேட்டை மேம்பாலம் வழியாக நடந்து சென்றார்.

  அப்போது அங்கு வந்த 2 மர்ம நபர்கள் முருகனை தாக்கி அவரிட மிருந்து ரூ.800யை பறித்தனர். உடனே முருகன் திருடன், திருடன் என கத்தினார். அவரது அலறல் சத்தம் கேட்டு ரோந்து பணியில் ஈடுபட்ட ஆர்.கே.நகர் போலீசார் 2 மர்ம நபர்களையும் மடக்கி பிடித்தனர்.

  விசாரணையில் மண்ணடி முத்தாம்பேட்டையை சேர்ந்த கார்த்திக், வியாசர்பாடி சதீஷ் என்பது தெரிய வந்தது. இதுகுறித்து ஆர்.கே. நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர்.

  குன்றத்தூர் அருகே தரப்பாக்கத்தில் நேற்று முன்தினம் இரவு கணவரு டன் மோட்டார் சைக்கிளில் சென்ற அதே பகுதியை சேர்ந்த கவிதாவை 4 பேர் கும்மல் வழிமறித்து கத்தி முனையில் 3 பவுன் நகை, செல்போன், ரூ.3 ஆயிரத்தை பறித்து மோட்டார் சைக்கிளில் தப்பினர்.

  இதே போல் அன்று இரவு வளசரவாக்கம் லட்சுமி நகரை சேர்ந்த இலங்கை தமிழர்களான சுரேந்தர்- லட்சுமி தம்பதியை தாக்கி 5 பவுன் செயின் பறிக்கப்பட்டது.

  ஒரே நாளில் பள்ளிக்கரணை, குன்றத்ததூர், மாங்காடு, போரூர் பகுதியில் தனியாக சென்றவர்களை மிரட்டி அடுத்தடுத்து நகை - பணம் பறிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

  இதுகுறித்து தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி அய்யப்பன் தாங்கல், போரூர் பகுதியை சேர்ந்த 4 பேரை பிடித்து உள்ளனர்

  இவர்களில் 2 பேர் சிறுவர்கள். ஒருவர் பிளஸ்-2 மாணவர் ஆவார். உல்லாச செலவு செய்ய வழிப்பறியில் ஈடுபட்டதாக அவர்கள் தெரிவித்து உள்ளனர்.

  பிடிபட்ட 4 பேரையும் தனிப்படை போலீசார் ரகசிய இடத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர்.

  Next Story
  ×