என் மலர்

  செய்திகள்

  கரூரில் ஆயுதப்படை பயிற்சியில் போலீஸ்காரர் உயிரிழப்பு
  X

  கரூரில் ஆயுதப்படை பயிற்சியில் போலீஸ்காரர் உயிரிழப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கரூர் அருகே இன்று பயிற்சியின் போது போலீஸ்காரர் சுருண்டு விழுந்து இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

  கரூர்:

  கரூர் மாவட்டம் தோகை மலை தொண்டமாங்கினம் அருகே உள்ள கொசூர் பகுதியை சேர்ந்தவர் பெருமாள் (வயது 29). இவர் கடந்த 2010-ம் ஆண்டு தமிழக காவல்துறையில் பணிக்கு சேர்ந்தார். முதலில் சென்னையில் பணிபுரிந்து வந்த அவர், பின்னர் கரூர் ஆயுதப்படை போலீசில் பணியமர்த்தப்பட்டார்.

  கரூர் தான்தோன்றிமலை யில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் காலை போலீஸ் காரர்களுக்கு பயிற்சி நடைபெறுவது வழக்கம். அதுபோல் இன்று காலை போலீஸ்காரர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் பெருமாளும் பங்கேற்றார்.

  ஓட்டப்பயிற்சியில் பங்கேற்ற அவர், திடீரென தனக்கு நெஞ்சுவலிப்பதாக கூறி, மயங்கி விழுந்தார். உடனே அங்கிருந்த போலீஸ் அதிகாரிகள் பெருமாளை மீட்டு, தான்தோன்றி மலையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக கரூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் போகும் வழியி லேயே பெருமாள் பரிதாபமாக இறந்தார்.

  நெஞ்சுவலி காரணமாக அவர் இறந்திருக்கலாம் என தெரிகிறது. இது தொடர்பாக பசுபதிபாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மரணமடைந்த பெருமாளுக்கு முத்துலட்சுமி என்ற மனைவியும் 2 பெண் குழந்தைகளும் உள்ளனர். அவர் திடீரென இறந்தது அவரது உறவினர்கள் மற்றும் போலீசார் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

  Next Story
  ×