என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
கோவையில் 2 இடங்களில் விபத்து: நகைக்கடை ஊழியர் உள்பட 2 பேர் பலி
கோவை:
கோவை போத்தனூர் சர்தார் சாகிப் வீதியை சேர்ந்தவர் ஜாகீர் உசேன்.
இவரது மகன் முகமது ஆசிக் (வயது 16) பெரியகடை வீதியில் உள்ள நகைக்கடை ஒன்றில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.
நேற்று இரவு இவரும், இவரது நண்பரான போத்தனூர் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த ஜாவீரும்(17) மோட்டார் சைக்கிளில் குறிச்சி பிரிவு சந்திப்பில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது முன்னால் சென்ற ஆட்டோ மீது இவர்களது மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட முகமது ஆசிக் சம்பவ இடத்திலேயே பலியானார். படுகாயம் அடைந்த ஜாவீர் சுந்தராபுரத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
விபத்து குறித்த தகவலின் பேரில் இன்ஸ்பெக்டர் சாந்தி, சப்–இன்ஸ்பெக்டர் தங்கராஜ் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல பீளமேடு ஆர்.டி.ஓ. அலுவலகம் அருகே நேற்று இரவு 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் இவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த வாலிபரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். வழியிலேயே அவர் இறந்தார்.
விபத்து குறித்து போக்குவரத்து புலனாய்வு கிழக்கு பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். பலியான வாலிபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? அவர் மீது மோதிய வாகனம் எது? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.