என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
மதுக்கரை அருகே நண்பர்களுடன் சுற்றியதை தந்தை கண்டித்ததால் என்ஜினீயர் தற்கொலை
கோவை:
கோவை மதுக்கரை அருகே உள்ள குட்டிக்கவுண்டம்பதி விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் பரமசிவம்(வயது 53). கல்லூரியில் ஊழியராக பணியாற்றி வருகிறார்.
இவரது மகன் நிரஞ்சன் குமார்(24). மெக்கானிக்கல் என்ஜினீயரான இவர் மலு மிச்சம்பட்டியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
நிரஞ்சன் குமார் தினமும் தனது நண்பர்களுடன் இரவு நேரங்களில் சுற்றியதாக கூறப்படுகிறது. இதனை அவரது தந்தை கண்டித்ததோடு, அறிவுரைகள் கூறினார்.
இதனால் மனமுடைந்த நிரஞ்சன் குமார் நேற்றுமுன் தினம் மாலை விஷம் குடித்த நிலையில் அப்பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே மயங்கிக் கிடந்தார்.அப்பகுதி மக்கள் அவரை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று அவர் இறந்தார். இது குறித்து மதுக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இன்ஸ்பெக்டர் சிவகுமார் விசாரணை நடத்தி வருகிறார்.