search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெண்ணின் வீட்டை அடித்து நொறுக்கிய விவகாரம்: 9 பேர் கைது
    X

    பெண்ணின் வீட்டை அடித்து நொறுக்கிய விவகாரம்: 9 பேர் கைது

    அதியமான்கோட்டை அருகே பெண்ணின் வீட்டை அடித்து நொறுக்கிய விவகாரம் தொடர்பாக 9 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
    தர்மபுரி:

    தர்மபுரி மாவட்டம் அதியமான்கோட்டை அருகே உள்ள ஒட்டப்பட்டி கிராமத்தை சேர்ந்த ஊர் கவுண்டரான ரங்கசாமி (வயது 65) என்பவருக்கும், அப்பகுதியை சேர்ந்த ஜெயராமன் மனைவி ரத்தினமாள் (43) என்பவருக்கும் இடையே சக்தி மாரியம்மன் கோவில் திருவிழாவுக்கு வரி வசூல் செய்யாதது தொடர்பாக தகராறு ஏற்பட்டது.

    இதில் ஆத்திரம் அடைந்த ரங்கசாமி தரப்பினர் ரத்தினமாள் வசித்து வரும் ஓட்டு வீட்டை அடித்து நொறுக்கி சூறையாடினர். இது குறித்து ரத்தினமாள் கொடுத்த புகாரின் பேரில் குமரேசன், லோகநாதன், முருகன், செல்வம், பரசுராமன், அருள் ஆகியோரையும், ரங்கசாமி கொடுத்த புகாரின் பேரில் சரவணன், சண்முகம், ஆதிரை ஆகியோரையும் அதியமான் கோட்டை போலீசார் கைது செய்து, தர்மபுரி கிளை சிறையில் அடைத்தனர்.
    Next Story
    ×