என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வக்கீல்களை சிறையில் அடைத்ததன் மூலம் போராட்டத்தை முடக்க முடியாது: மோகனகிருஷ்ணன் கண்டனம்
Byமாலை மலர்26 July 2016 9:58 AM GMT (Updated: 26 July 2016 9:58 AM GMT)
கைது செய்யப்பட்ட வக்கீல்களை சிறையில் அடைத்ததன் மூலம் போராட்டத்தை முடக்க முடியாது என்று வக்கீல் சங்க முன்னாள் தலைவர் மோகனகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னை:
கோர்ட்டில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட 5 வக்கீல்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதற்கு ஐகோர்ட்டு வக்கீல் சங்க முன்னாள் தலைவர் மோகன கிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது:–
நியாயமான கோரிக்கைகளுக்காக போராட்டத்தில் ஈடுபட்ட வக்கீல்களை கைது செய்து சிறையில் அடைத்திருப்பது கண்டிக்கத்தக்கது. வக்கீல்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியே இந்த பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும். அப்போதுதான் போராட்டம் முடிவுக்கு வரும்.
அதனை விடுத்து வக்கீல்கள் மீது வழக்கு போட்டு அவர்களை கைது செய்து சிறையில் அடைப்பதன் மூலம் போராட்டத்தை முடக்க முடியாது. இதுபோன்ற நடவடிக்கைகளால் போராட்டம் மேலும் வேகம் எடுக்கவே வழிவகுக்கும்.
கைதான 5 வக்கீல்களையும் ஜாமீனில் எடுக்க ஜார்ஜ் டவுன் கோர்ட்டில் மனு போட்டுள்ளோம்.
அந்த மனு இன்று அல்லது நாளை விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கிறோம்.
இவ்வாறு மோகன கிருஷ்ணன் தெரிவித்தார்.

Next Story
×