search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மதுரை அருகே பயங்கரம்: மாணவனை கொன்று உடல் புதைப்பு
    X

    மதுரை அருகே பயங்கரம்: மாணவனை கொன்று உடல் புதைப்பு

    மாணவனை கொன்று உடலை மர்ம மனிதர்கள் புதைத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    பேரையூர்:

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள உச்சபட்டியை சேர்ந்தவர் சுந்தரபாண்டியன். இவரது மகன் அருண்குமார் (வயது8). இவன், அங்குள்ள ஊராட்சி ஒன்றிய பள்ளியில் 5–ம் வகுப்பு படித்து வந்தான்.

    கடந்த ஞாயிற்றுக்கிழமை மாணவன் அருண்குமார், வீட்டில் இருந்து விளையாட வெளியே சென்றான். அதன் பிறகு அவன் வீடு திரும்பவில்லை.

    இதனை தொடர்ந்து பெற்றோர் பல இடங்களில் தேடியும் அருண்குமார் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. இது குறித்து ஆஸ்டின்பட்டி போலீசில் சுந்தரபாண்டியன் புகார் செய்தார்.

    அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவனை தேடி வந்தனர். இந்த நிலையில் உச்சபட்டி முனியாண்டிபுரம் பகுதி மக்கள், அங்குள்ள ஓடைப் பாலம் பகுதியில் துர்நாற்றம் வீசுவதை அறிந்தனர். சம்பவ பகுதியில் சென்று பார்த்தபோது, ஒரு உடல் மண்ணால் மூடப்பட்டு இருப்பதும், கால் மட்டும் வெளியே தெரிவதையும் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இது குறித்து உடனடியாக ஆஸ்டின்பட்டி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதன் பேரில் திருப்பரங்குன்றம் போலீஸ் துணை கண்காணிப்பாளர் ராமசாமி மற்றும் போலீசார் சம்பவ இடம் விரைந்தனர்.

    அவர்கள் மண்ணை தோண்டி உடலை மீட்டு பார்த்தபோது, அது மாயமான மாணவன் அருண் குமார் என தெரியவந்தது. அவனை யாரோ கொன்று, ஓடைப்பாலம் பகுதியில் உடலை மண்ணைப்போட்டு புதைத்திருக்கலாம் என தெரிகிறது. அவர்கள் யார்? எதற்காக கொலை நடந்தது என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×